சீன் - தமிழகத்திலேயே ரூ. 100 கோடி வசூல்!
சீன் தமிழக பாக்ஸ் ஆபிஸில் அசத்தல்....

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சீன் திரைப்படத்தின் தமிழக வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு மற்றும் விஸ்வநாத் ஆண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சீனும் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து சூர்யாவையும் அவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைப் பின்னணியால் இப்படம் உலக அளவில் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தில் நடிகர் நஸ்லன் வில்லனாகவும் நடிகை நஸ்ரியா நாயகியாகவும் நடித்திருந்தனர். இருவரது பங்களிப்பும் படத்திற்கு வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்ததால் அவர்களுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில், சீன் திரைப்படம் தமிழகத்திலேயே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு திரைப்படம் தமிழகத்தில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
The Tamil Nadu box office collection for the film Scene, starring actor Suriya, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


