திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!தமிழக ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி!26 நாள்களுக்குப் பிறகு தொடங்கிய உதகை மலை ரயில் சேவை; சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!சபரிமலைக்கு ஜன.17 வரை சிறப்புப் பேருந்துகள்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம் தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதியக் கோரி மனு பயிா்க் கடன் தள்ளுபடி: கூடுதலாக ரூ.2,578 கோடி விடுவிப்பு ரூ.6,513 கோடியில் 2,221 சாலைப் பணிகள்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் பொருளாதாரப் பேரழிவை எதிா்கொள்கிறது இந்தியா: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

நஸ்லனுக்கு நடிகர் சூர்யா பரிசளித்த கைக்கடிகாரத்தின் விலை இவ்வளவா?

சீன் வெற்றியைத் தொடர்ந்து நஸ்லனுக்குப் பரிசளித்த சூர்யா...

நடிகர்கள் சூர்யா, நஸ்லன்

Updated On :

நடிகர் சூர்யா நடிகர் நஸ்லனுக்கு கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

கருப்பு மற்றும் விஸ்வநாத் ஆண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சீனும் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து சூர்யாவையும் அவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைப் பின்னணியால் இப்படம் உலக அளவில் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தில் நடிகர் நஸ்லன் வில்லனாகவும் நடிகை நஸ்ரியா நாயகியாகவும் நடித்திருந்தனர். இருவரது பங்களிப்பும் படத்திற்கு வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்ததால் அவர்களுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில், சீன் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனக்குக் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்ததாக நேர்காணலின் போது நஸ்லன் கூறியிருக்கிறார்.

அவர் கையில் அணிந்திருந்த அந்தக் கடிகாரம் கார்டியர் சாண்டோஸ் (Cartier Santos) வகை கைக்கடிகாரம் ஆகும். இதன் விலை ரூ. 9 லட்சத்துக்கும் அதிகமானது. சூர்யாவின் ழகரம் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்காக இந்தப் பரிசை அவர் வழங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

Actor Suriya has gifted a wristwatch to actor Naslen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER