அப்பா குட்டி படத்துக்காக... கோவை எக்ஸ்பிரஸ் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்த விஜய் ஆண்டனி!
நடிகர் விஜய் ஆண்டனி தனது அப்பா குட்டி திரைப்படத்திற்காக செய்த வித்தியாசமான செயல் குறித்து...

கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் விஜய் ஆண்டனி. - படங்கள்: எக்ஸ் / ஸ்ரீதர் பிள்ளை.
நடிகர் விஜய் ஆண்டனி அப்பா குட்டி திரைப்படத்திற்காக செய்த வித்தியாசமான புரமோஷன் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள ’அப்பா குட்டி’ திரைப்படம் நேற்று (நவ.20) தமிழகம் முழுவதும் வெளியானது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள், ஜென்ஸன் திவாகர், அருவி மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தந்தை - மகள் இடையேயான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில் அவர் செய்த புரமோஷன் கவனம் பெற்று வருகிறது. கோவை எக்ஸ்பிரஸில் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
சென்னையில் இருந்து கோயமுத்தூர் சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா இருக்கையில் பயணித்தார். அங்கு பொதுமக்களிடமும் பேசி, அப்பா குட்டி படத்திற்காக புரமோஷன் செய்தது கவனம் பெற்று வருகிறது.
Unique promotions tour by rail by #VijayAntony ð â¤ï¸
— Sreedhar Pillai (@sri50) November 21, 2026
Today @vijayantony is taking the rail route for #AppaKutty promotions!
He is travelling in an unreserved compartment of the Kovai Express (12675) to Coimbatore from Chennai!
Vijay Antony will share a candid journey with⦠pic.twitter.com/8Dd8S31Pqd
#VijayAntony à®à®µà¯à®µà¯à®°à¯ தà®à®µà¯à®¯à¯à®®à¯ offline Promotions lað
— Prakash Mahadevan (@PrakashMahadev) November 21, 2026
UNRESERVED train compartment la #Appakutty பà®à®¤à¯à®¤à¯à®à¯à®à®¾à® ðð¼
pic.twitter.com/urnWCBQNEl
Summary
Kovai Express unreserved compartment Vijay Antony Appa Kutty promotions
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


