எலும்பு முறிவு! விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் குட்டி யானை! அனந்த் அம்பானி முன்னெடுப்புதங்கம் விலை குறைய மூன்று முக்கிய காரணங்கள்!வேகம் முக்கியம்! நாரா லோகேஷ் கிண்டலுக்கு பதில் கொடுத்த அமைச்சர் கீர்த்தனா!கணவரின் தோழியைக் கொல்ல ரூ.13 லட்சம் கூலி! துப்புத் துலக்க உதவிய 300 சிசிடிவிகள், ஜிபிஎஸ் டிராக்கிங்!ஜோதிடர் பேச்சால் மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கும் தவெக அரசு: மு.க. ஸ்டாலின்நவ. 23-இல் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்

நேரலையில் 52 மணி நேரத்தில் ஜிடிஏ 6 விளையாட்டை முடித்த யூடியூபர் ஸ்பீட்!

பிரபல யூடியூபர் ஐஷோஸ்பீட் எனப்படும் டேரன் வாட்கின்ஸ் ஜூனியர் ஜிடிஏ 6 விளையாட்டை நிறைவு செய்தது குறித்து...

YouTuber Speed ​​completes GTA 6 in 52 hours during a live stream

நேரலையில் 52 மணி நேரத்தில் ஜிடிஏ 6 விளையாட்டை முடித்த யூடியூபர் ஸ்பீட் - படங்கள்: யூடியூப் / ஐஷோஸ்பீட்

Updated On :

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஐஷோஸ்பீட் எனப்படும் டேரன் வாட்கின்ஸ் ஜூனியர் ஜிடிஏ 6 விளையாட்டை 52 மணி நேரத்தில் நேரலையில் விளையாடி நிறைவு செய்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

21 வயதாகும் இவர் தனது குறும்புத்தனமான சேட்டைகளால் சமூக வலைதளத்தில் பிரலமானவர். ஸ்பீட் என செல்லமாக அழைக்கப்படுகிறார். ரொனால்டோ ரசிகரான இவர் தடகளத்திலும் ஆர்வம் உடையவர். யூடியூபில் நேரலை விடியோக்களை பதிவிட்டு உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்துள்ளார்.

90ஸ் கிட்ஸ்களுக்கான மிகப்பெரிய விளையாட்டாக ஜிடிஏ 4 (கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 4) இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜிடிஏ 6 எடிஷன் வெளியாகியுள்ளது.

இந்த விளையாடினை இரவு முழுவதும் தூங்காமல் 52 மணி நேரம் 30 நிமிஷங்களில் முடித்து பலரையும் மிரள வைத்துள்ளார். இதற்கான நேரலை விடியோக்கள் யூடியூப்பில் வைரலாகி வருகின்றன.

வெளியான இரண்டே நாள்களில் ஸ்பீட் இதனை முழுவதுமாக விளையாடி அசத்தியுள்ளார். முதல் 40 மணி நேரத்தில் 80 சதவிகித விளையாட்டினை முடித்தார்.

இடையில் தூக்கம் வந்தும் அதனைத் தவிர்த்து, முழுவதுமாக முடிக்கும் வரை ஓயமாட்டேன் என நேரலையில் கூறியுள்ளார். முழுவதுமாக முடித்ததும் கத்தி கூச்சலிடாமல் நாயகன் நாயகி இறந்ததால் ஸ்பீட் கண்ணீர் விட்டு அழுதார்.

இது ஸ்பாயிலாராக இருந்தாலும் பலரும் ஸ்பீட்டுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். எப்படி இவ்வளவு வேகத்தில் இதனை முடித்தார் என்று பலரும் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Summary

YouTuber IShowSpeed ​​completed the game GTA 6 in a live stream lasting 52 hours!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.