நெட்பிளிக்ஸின் முதல் பாகிஸ்தான் இணையத் தொடர்! எப்போது வெளியீடு?
பாகிஸ்தான் இணையத் தொடர் குறித்து...

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தன் முதல் பாகிஸ்தான் இணையத் தொடரை உருவாக்கியுள்ளது.
உலகம் முழுக்க பல கோடி சந்தாதாரர்களைக் கொண்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம் நேரடியாகவும் திரைப்படங்களை, இணையத் தொடர்களை, ஆவணப்படங்களைத் தயாரிக்கவும் செய்கிறது. அவற்றில் நெட்பிளிக்ஸ் நேரடியாகத் தயாரித்த ஸ்ட்ரெஞ்சர் திங்ஸ் (stranger things), மணி ஹெய்ஸ்ட் (money heist), ஸ்குவிட் கேம் (squid game) ஆகிய தொடர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
இந்தியாவிலும் சாக்ரட் கேம்ஸ் (sacred games), தில்லி கிரைம்ஸ் (delhi crimes) ஆகியவை நெட்பிளிக்ஸால் நேரடியாகத் தயாரிக்கப்பட்டு வரவேற்பைக் கண்டன.
இந்த நிலையில், உலக அளவில் பெரிய பொழுதுபோக்கு ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் தன் முதல் பாகிஸ்தான் இணையத் தொடரைத் தயாரித்துள்ளது.

ஜோ பச்சே ஹைன் சங்க் சமேத் லோ (Jo Bache Hain Sang Samet Lo) எனப் பெயரிடப்பட்ட இத்தொடர் டிச. 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இதனை ஃபர்ஹாத் இஸ்திக் இயக்கியுள்ளார்.பிரபல பாகிஸ்தான் நடிகர்களான ஃபவாத் கான், மஹிரா கான், ஹனியா ஆமிர் உள்ளிட்டோர் இத்தொடரில் நடித்துள்ளனர்.
Netflix has produced its first Pakistani web series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


