தாஜ் மஹால் பார்க்க விருப்பம் தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர்! மத்திய அரசு சொன்ன பதில்
தாஜ் மஹாலை சுற்றிப் பார்க்க விருப்பம் தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சருக்கு வந்த பதில் பற்றி...

தாஜ் மகால் - ஏஎன்ஐ
இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள பாகிஸ்தானின் முக்கிய அமைச்சா்களில் ஒருவரான முசாதிக் மாலிக், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்க தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தில்லியில் நவ.20ஆம் தேதி தொடங்கி 22 வரை நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா விடுத்த அழைப்பின் பேரில், பாகிஸ்தான் அமைச்சா் பங்கேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை என்ற பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேற்கொண்டிருந்ததற்குப் பிறகு, பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியா வந்துள்ளார்.
தன்னுடைய மனைவி மற்றும் பாகிஸ்தான் நாட்டின் மூத்த அதிகாரிகளுடன் இந்தியா வந்திருக்கும் முசாதிக் மாலிக், இந்தியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்க விரும்புவதாகவும், குறிப்பாக தாஜ் மகால் மற்றும் ஹுமாயுன் கல்லறையை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு மத்திய அரசு, இந்தியா வந்திருக்கும் எந்த நாட்டு அமைச்சர்களுக்கும் பொதுவாகக் கட்டுப்பாடுகள் கிடையாது. ஆனால் பாகிஸ்தான் அமைச்சருக்கு கூட்டத்தில் பங்கேற்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் சுற்றிப் பார்க்க விரும்பும் இடங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும். தாஜ் மகாலை சுற்றிப் பார்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஹுமாயுன் கல்லறைக்குச் செல்ல இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பு கடந்த 2023-இல் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ இந்தியாவுக்கு வந்திருந்தாா்.
தற்போது பாகிஸ்தான் அமைச்சரின் வருகை, கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ராணுவ மோதலுக்குப் பிறகான பதற்றத்தைத் தணிக்கும் அந்நாட்டின் முயற்சியாக பாா்க்கப்படுவதோடு, பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் எஸ்சிஓ உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கும் வழிவகை ஏற்படும் என கருதப்படுகிறது.
Summary
Pakistani minister expresses desire to visit the Taj Mahal! Here is the Central Government's response
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

