அழவில்லை என்றால் ரூ. 1 கோடி! இயக்குநருக்கு சவால் விட்ட தயாரிப்பாளர்... என்ன ஆனது?

ஏஓடி திரைப்படத்தைப் பார்த்து கண்கலங்கவில்லை என்றால்....

தயாரிப்பாளர் அல்லு அர்விந்த், இயக்குநர் சுகுமார்

Updated On :

ஏஓடி திரைப்படத்தைக் கண் கலங்காமல் பார்த்தால் ஒரு கோடி தருவதாகக் கூறிய தயாரிப்பாளரின் சவால் கவனம் பெற்றுள்ளது.

நடிகர் துல்கர் சல்மான் நடித்த ஆகாசம்லோ ஒக தாரா திரைப்படம் கடந்த நவ. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் மூலம் சாத்விகா வீரவள்ளி நாயகியாக அறிமுகமானார். விண்வெளிக்குச் செல்ல ஆசைப்படும் பெண்ணின் கதையாக உருவான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடமும் கூடுதல் வரவேற்பைப் பெற்று வணிக ரீதியாக அடுத்த அடுத்த நாள்களில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால், வசூல் ரீதியாக இப்படம் இதுவரை ரூ. 45 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story image

இந்த நிலையில், புஷ்பா திரைப்படத்தை இயக்கிய சுகுமார் இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், ”தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் என்னை அழைத்து ஆகாஷம்லோ ஒக தாரா திரைப்படத்தைக் காணச் சொன்னதுடன் இப்படத்தைப் பார்த்து கண்கலங்கவில்லை என்றால் நான் ரூ. 1 கோடி தருகிறேன் அழுதுவிட்டால் நீங்கள் எனக்கு ஒரு லட்சம் கொடுங்கள் என சுவாரஸ்யமான சவாலைவிட்டார்” எனக் குறிப்பிட்டு ஒரு லட்சத்திற்கான காசோலையின் புகைப்படத்தை சுகுமார் இணைத்துள்ளார்.

மேலும், ”என்னவொரு விலைமதிப்புமிக்க பரிந்துரை சார்!” எனக் நெகிழ்ந்துள்ளார். ஏஓடி திரைப்படத்தைப் பார்த்த சுகுமார் கண்கலங்கிய சம்பவமும் இந்தப் பதிவும் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

A producer’s challenge offering ten million (one crore) to anyone who can watch the film AOT without shedding a tear has garnered attention.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.