'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! இன்று 6 மாவட்டங்களில் மழை! நாளை (அக். 4) 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு! இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: சக விமானியின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் - முதல்வர் விஜய் கண்டனம்

23 ஆம் நாளிலும் விசில்..! - மண்டாடி இயக்குநருக்கு சூர்யா கடிதம்!

மண்டாடி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கு நடிகர் சூர்யா அனுப்பிய கடிதம் குறித்து...

surya's letter to mandaadi director

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி - நடிகர் சூர்யா - கோப்புப் படம்

Published On :

நடிகர் சூரி நாயகனாக நடித்து வெளியான “மண்டாடி” திரைப்பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தியை வாழ்த்தி நடிகர் சூர்யா கடிதம் அனுப்பியுள்ளார்.

அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தியின் இயக்கத்தில் நடிகர் சூரி மற்றும் சுஹாஸ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான படம் “மண்டாடி”. மீனவர்களின் வாழ்வியலையும், பாய்மரப் படகுப்போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், மண்டாடி படத்தைத் தாமதமாகதான் பார்த்ததாகவும், 23 ஆவது நாளிலும் ரசிகர்கள் விசில் மற்றும் கைதட்டல்களுடன் கொண்டாடுவதாகவும் குறிப்பிட்டு நடிகர் சூர்யா இயக்குநர் மதிமாறனுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுபற்றி, அந்தக் கடிதத்தில் கூறப்பட்டதாவது:

“அற்புதமான பொழுதுப்போக்குப் படைப்பிற்கு நன்றி. திரைப்படத்தைப் பார்ப்பதற்குத் தாமதமானாலும், 23 ஆவது நாளில் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆராவாரம், விசில் மற்றும் கைத்தட்டல்களுக்கு இடையே இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அற்புதமாக எழுதியுள்ளீர்கள். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற “மண்டாடி” திரைப்படம் உலகளவில் ரூ. 140 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Actor Suriya has sent a letter congratulating Mathimaran Pugazhendhi, the director of the film Mandadi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.