ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

ராக்கா எப்போது வெளியாகும்? அட்லீ பதில்!

ராக்கா வெளியீடு குறித்து அட்லீ....

அட்லீ, அல்லு அர்ஜுன்

Published On :

இயக்குநர் அட்லீ ராக்கா திரைப்படத்தின் வெளியீடு குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் அட்லி நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ராக்கா எனப் பெயரிட்டுள்ளனர். உலகின் முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனங்களின் மேற்பார்வையில் இதன் முக்கிய காட்சிகள் உருவாகி வருவதால் அவதார் போன்று மிகச்சிறப்பான காட்சியனுபவங்களக ராக்கா எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

மேலும், ஆச்சரியப்படும் வகையில் பான் உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராக்கா வணிக ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தனா, உள்ளிட்டோர் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதில், வில்லியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், ராக்காவில் தான் நடிக்கவில்லை என்றும் அதற்காக யாரும் தன்னை அணுகவில்லை என்றும் ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் அட்லீயிடம் ராக்கா திரைப்படம் எப்போது வெளியாகும் எனக் கேட்கப்பட்டது. அதற்கு அட்லீ, “என் தயாரிப்பாளர் கூட இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. விரைவில், ராக்கா திரையரங்குகளுக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார். இப்படம் ரூ. 600 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.

Director Atlee has spoken about the release of the movie Raaka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER