நிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு! தமிழ்நாட்டில் 8 மணிநேரமாக மின்தடை நீட்டிக்கப்படுகிறதா? மின்வாரியம் விளக்கம்! வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்! சத்தியபாமா உருவகேலி: மு.க. ஸ்டாலினை விமர்சித்த முதல்வர் விஜய்!மின் கட்டணம், விலைவாசியைப் பார்த்துவிட்டு வாக்களியுங்கள்: தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!

மாற்றம் வேண்டும்: சமந்தா

சமூகத்தில் மாற்றம் வேண்டும் என நடிகை சமந்தா கூறியது குறித்து...

Samantha insta story

நடிகை சமந்தா - Insta | Samantha

Published On :

சமூகத்தில் மாற்றம் வேண்டும் என நடிகை சமந்தாவின் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "நாம் இன்னும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

பாலியல் தொழிலாளர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால், அங்கு செல்லும் வாடிக்கையாளர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை.

தனியாய் பிள்ளையை வளர்க்கும் தாய்மார்களை விமர்சிக்கும் இதே சமூகம், அதற்குக் காரணமான - பொறுப்பின்றி விட்டுச் செல்லும் தந்தைகளைப் பற்றி பேசுவதில்லை.

பாலியல் கொடுமைக்கு ஆளானவர்களை விமர்சிக்கும் இந்தச் சமூகம், அந்த வன்கொடுமையைச் செய்தவரைப் பற்றி பேசுவதில்லை.

உண்மையைப் பேசுபவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். ஆனால், அதை மூடி மறைப்பவர்கள் பேசப்படுவதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

தன்னுடைய புகைப்படங்களை டீப்ஃபேக் செய்து, தவறாகச் சித்திரித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக சமந்தா சமீபத்தில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் தொடர்பான ஏஐ சித்திரிப்பு புகைப்படங்கள், விடியோக்களை சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் சமூகத்தில் மாற்றம் வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Summary

Society needs change, says Actress Samantha

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.