டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்!

பத்தா - கூடுதல் திரைகள் ஒதுக்கீடு!

பத்தா திரைப்படத்திற்கு அதிக திரைகள்...

Published On :

விஜய் சேதுபதி நாயகனாக நடித்த பத்தா திரைப்படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள பத்தா திரைப்படத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. ரௌடியான நாயகன் விஜய் சேதுபதி எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொள்ள, அதைச் செய்தவர் யார்? பத்தா அதனைக் கண்டுபிடித்தாரா இல்லையா? என்கிற கதையாக உருவான இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வழக்கமான பாணி ரௌடியின் கதையாக இல்லாமல் வித்தியாசமாக அதனை எடுத்த விதத்தில் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

முதல் நாளில் கிடைத்த நல்ல விமர்சனங்களால் இரண்டாம் நாளிலிருந்து டிக்கெட் விற்பனைகளும் அதிகரித்துள்ளன. இதனால், இப்படம் இதுவரை ரூ. 15 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படத்திற்கு கூடுதலாகத் திரைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பல திரையரங்குகளில் முதன்மை திரைகளுக்கும் பத்தா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாரமும் ஆரோக்கியமான வசூல் இருக்கும் என்பதால் இப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Additional screens have been allocated for the film baththa, starring Vijay Sethupathi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.