
ரிஷிகாந்த், சனந்துக்கு தங்க மோதிரம் பரிசளித்த மிஷ்கின்!
டோரதியைப் பாராட்டிய மிஷ்கின்...

இயக்குநர் மிஷ்கின் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த்
இயக்குநர் மிஷ்கின் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் ஆகியோருக்கு தங்க மோதிரத்தைப் பரிசளித்துள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில் உருவான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக உருவானது. கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களுடன் வரவேற்பையும் பெற்றுள்ளது.
மேலும், இப்படம் உலக அளவில் ரூ. 15 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் மிஷ்கின், வசந்த பாலன், கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “டோரதியைச் சிறந்த திரைப்படம் எனச் சொல்ல மாட்டேன். ஏனென்றால், அப்படி சொன்னால் அதோடு நின்றுவிடுகிறது. அதனால் இப்படிச் சொல்கிறேன்; இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய தி ஒடிசி திரைப்படத்தைவிட 100 மடங்கு சிறந்த திரைப்படம் டோரதி. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் காலில் விழலாம் என நினைக்கிறேன். என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகப்பெரிய ஜீனியஸ் இளையராஜாதான். அதற்கு இணையான படைப்பாளியாக கார்த்திக் சுப்புராஜைப் பார்க்கிறேன். என்னை ஓவராக பொங்கக்கூடியவர் என்பார்கள். பொங்காமல் இருந்தால் அது என்ன வாழ்க்கை?
இப்படத்திற்காக நிறைய எதிர்மறையான விமர்சனங்களைக் கார்த்திக் சுப்புராஜ் பெற்றிருக்கிறார். அவரின் தலையில் வானவில் போன்று வரைந்து கிண்டலடிக்கின்றனர். கார்த்திக்கு இயற்கையே வானவில்லாக ஆசீர்வாதம் செய்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் டோரதிதான் சிறந்த திரைப்படம்.
நடிகர்கள் ரிஷிகாந்தும் சனந்தும் மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். தங்களுக்குள் இருந்த ஆணைக் கொன்றுவிட்டுதான் இதில் நடித்திருக்க முடியும். நிஜ நாயகனாகவே மாறியிருக்கிறார்கள். உங்கள் இருவருக்கும் பெரிய பொறுப்புணர்வு இருக்கிறது. ரசிகர் மன்றம் எல்லாம் வைத்து காமெடி செய்துவிடாதீர்கள். நீங்கள் இருவரும் டோரதியில் என்ன செய்தியிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. உங்களின் பசங்களுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் தெரியும். உங்கள் காலிலும் விழ வேண்டும். அதற்கு முன், என் மோதிரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என தன் விரலில் அணிந்திருந்த இரண்டு மோதிரங்களையும் கழற்றி ரிஷிகாந்த், சனந்துக்குப் பரிசளித்தார்.
Director Mysskin has gifted gold rings to actors Rishikanth and Sananth.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







