சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்!அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

உங்கள் அன்பும் ஆதரவும்... விடியோ வெளியிட்ட அஜித் குமார்!

அஜித் குமார் வெளியிட்ட புதிய விடியோ...

அஜித் குமார்

Published On :

நடிகர் அஜித் குமார் தன் கார் பந்தயம் குறித்து புதிய விடியோவை வெளியிட்டுள்ளார்.

நடிகரும் ரேஸருமான அஜித் குமார் உலகளவில் நடைபெறும் கார் பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அஜித் குமார் ரேஸிங் அணி மற்றும் பெல்ஜியத்தைச் சேர்ந்த ரெட்ஆண்ட் ரேஸிங் அணிகளின் கூட்டணியில், அஜித்தின் குழு போட்டிகளில் பங்கேற்று வருகிறது.

இறுதியாக, பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேரம் கார் பந்தயத்தில் அஜித்தின் குழுவினர் பங்கேற்றனர். 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற இந்த பந்தயத்தில் அஜித் குமாரின் ரேஸிங் அணி GT3 Pro-Am பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. அதேபோல, பந்தயத்தின் ஒட்டுமொத்த தரவரிசையில் 5-வது இடம்பெற்றுள்ளது.

மேலும், கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெறும் அடுத்த கார் பந்தயத்திற்கும் அஜித் குமார் தன் குழுவினரோடு தயாராகி வருகிறார். இதற்கான பயிற்சிக்கு இடையே, விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “போர்ச்சுக்கலில் நடைபெறும் கார் பந்தயத்தில் வருகிற அக். 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் பங்கேற்கிறோம். உங்களின் அன்பும் ஆதரவும் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Ajith Kumar has released a new video regarding his car racing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER