நிமிஷாவின் என்ன விலை! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள். - சித்திரிப்பு / விஜய்
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைப் பார்ப்போம்.
1என்ன விலை
நடிகர் கருணாஸ், நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ’என்ன விலை’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று(அக். 15) வெளியாகியிருக்கிறது.
மலையாளத்தில் தேசிய விருது பெற்ற தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும் என்ற படத்துக்கு கதை எழுதிய சஜீவ் பழூர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
2ஆஷா

நடிகை ஊர்வசி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான ஆஷா படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை(அக். 16) வெளியாகிறது.
அஜித் விநாயக ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஊர்வசியின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.
3இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்

ஷ்யாமின் கிரீஷ் இயக்கத்தில் சங்கீத் பிரதாப், ஷராஃபுதீன், அகிலா பார்கவன் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்.
இந்தத் திரைப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
4கப்பி ஸ்குவாட்

பெல்ராஜ் கலாரிக்கல் இயக்கத்தில் ரினோஷ் ஜார்ஜ், ஸ்ரீஜித் கங்காதரன், ராகுல் ரிஜி நாயர், ஸ்ரீஜித் பாபு, அர்ஜுன் ரஞ்சன் மற்றும் தியா தீபன் ஆகியோர் நடித்து வெளியான தொடர் காப்பி ஸ்குவாட்.
இந்தத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.
5காகிதம் படவாலு

எம்.ஜி.ஆர். துக்காராம் இயக்கத்தில் வர்தன் குர்ராலா, கிருஷ்ணா பிரியா, சம்மேதா காந்தி நடிப்பில் வெளியான தெலுங்கு மொழித்திரைப்படம் காகிதம் படவாலு.
இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
6ஒரு அன்வேஷனத்தின் துடக்கம்

ஷைன் டாம் சாக்கோ, வாணி விஸ்வநாத், ஷிவதா, ஸ்வாசிகா, துர்கா கிருஷ்ணா, அனுமோள், சமுத்திரக்கனி, முகேஷ் நடிப்பில் வெளியான மலையாள மொழித்திரைப்படம் ஒரு அன்வேஷனத்தின் துடக்கம்.
உண்மையைத் தேடும் புலனாய்வு படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.
7கடந்த வார ஓடிடி (மண்டாடி)

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இந்தப் படம், ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சூரி நாயகனாக நடித்திருந்தார்.
இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.
8பாரிஸ் கஃபே

கண்மணி ரங்கநாதன் தயாரிப்பில் சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோள், அர்ச்சனா குமார், விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் பாரிஸ் கஃபே.
இந்தத் திரைப்படத்தை ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் காணலாம்.
9பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார்

காவல் நிலையத்தில் காவல் துறையினரால் நடக்கும் அதிகார அத்துமீறல்கள் குறித்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றிருந்தது.
நடிகை பார்வதி திருவோத்து நடிப்பில் வெளியான பிரதம த்ரிஷ்டிய குட்டக்கார் திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.
Summary
this week ott release movies enna vilai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


