அன்பில் அவன் முதல் ஹைக்கூ வரை! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (நவ. 20 - 26)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

This week Ott

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள். - சித்திரிப்பு / விஜய்

Updated On :

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைப் பார்ப்போம்.

1அன்பில் அவன்

Listicle image

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பில் அவன்.

இந்தத் திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

2ஹைக்கூ

Listicle image

நடிகர் ஏகன் - இயக்குநர் யுவராஜ் சின்னசாமி கூட்டணியில் உருவான திரைப்படம் ஹைக்கூ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (நவ. 20) வெளியாகிறது.

காதலியால் கைவிடப்பட்ட நாயகனுக்கும், காதலனால் மன சித்திரவதைக்கு உள்ளான கதாநாயகிக்கும் இடையே மலரும் காதல் என்ன ஆனது என்பதே ஹைக்கூ திரைப்படத்தின் கதை.

மேலும் இந்தப் படத்தில், நடிகர்கள் ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், சபரீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

3418

Listicle image

கே.ஜி.எஃப் படத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றிய கீர்த்தன் நடகெளடா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 418.

இந்தப் படத்தில், சைத்ரா ஜே. ஆச்சார், சூர்யா ராஜ் வீரபதினி, சரண் லக்கராஜூ, பிரீத்தி பகடாலா மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மருத்துவக் கல்லூரி விடுதியில் 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கும் 418-ஆம் அறைக்குள் உலவும் தேவிகா என்ற ஆவியிடம் சிக்கிய மாணவர்கள், தப்பித்தார்களா என்பதே 418 படத்தின் கதை. இந்தத் திரைப்படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

4கிரேஸி கல்யாணம்

Listicle image

அனுபமா பரமேஸ்வரனின் கிரேஸி கல்யாணம் திரைப்படம் ஆஹா தளத்தில் நாளை வெளியாகிறது

நகைச்சுவை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் அனுபமா நடித்துள்ளார். தருண் பாஸ்கர், விகே நரேஷ், அகில் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

5அனுமான பக்‌ஷி

Listicle image

விமல் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான தெலுங்கு நகைச்சுவை த்ரில்லர் திரைப்படம் அனுமான பக்‌ஷி.

இதில் ராக் மயூர், மெரின் பிலிப், பிரின்ஸ் செசில், அனன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

6மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ்

Listicle image

புதிய அலுவலக நகைச்சுவை இணையத் தொடரான மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஆபிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது.

இந்த இணைய தொடரில் நடிகர்கள் பிரதீப் ஆண்டனி, ஸ்மேஹா மணிமேகலை, சனம் ஷெட்டி மற்றும் மகிழ் திருமேனி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

7தி ஒடிசி

Listicle image

கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய தி ஒடிசி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம். ஆனால், கூடுதலாக தொகை செலுத்தி, வாடகைக்கு (Rent) எடுத்துப் பார்க்கும் முறையில் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மோர்டன், ஜெண்டயா மற்றும் சார்லிஸ் தெரான் நடித்துள்ளார்கள்.

8ட்ரோன்ஸ்

Listicle image

பரிதாபங்கள் டிராவிட் செல்வம் நாயகனாக நடித்துள்ள ட்ரோன்ஸ் படம் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகைகள் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் தேவதர்ஷினி, பரிதாபங்கள் டிராவிட் செல்வம், குரேஷி, சதீஷ், சசி செல்வராஜ், ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

9கடந்த வார ஓடிடி (ஜெயிலர் - 2)

Listicle image

இயக்குநர் நெல்சன் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

மேலும் இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மிர்னா, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

10ரணபலி

Listicle image

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரணபலி திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நாயகியாக ரஷ்மிகா நடித்திருந்தார்.

11புஷ்பக விமானம்

Listicle image

சாய் ரோனக் மற்றும் மதோதாமராஜு நடிப்பில் சதீஷ் ரெட்டி மல்லிடி இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள தெலுங்கு மொழி இணையத் தொடர் புஷ்பக விமானம்.

இந்த இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

12ஹேப்பி ஜர்னி

Listicle image

அபிராம் நாயுடு இயக்கத்தில் ஆமணி, ஜான்சி, அன்னபூர்ணா, பாயல் ராதாகிருஷ்ணா, ரவி சிவா தேஜா உள்ளிட்டோர் நடிப்பில் ஏழு பெண்கள் பயணம் மேற்கொள்வதை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ஹேப்பி ஜர்னி.

இந்தத் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.

13பாந்த்ரா

Listicle image

அருண் கோபி இயக்கத்தில் திலீப் நடித்துள்ள இந்தப் படம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில், ஜீ5 ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.

தமன்னா நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், டினோ மோரியா, மம்தா மோகன்தாஸ், கலாபவன் ஷாஜோன், ஆர். சரத்குமார், லீனா, ஈஸ்வரி ராவ், கே.பி. கணேஷ் குமார், சித்திக் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Summary

Let’s take a look at which films and web series are set to be released on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.