பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்! ரூ.14,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ரத்தோர் மாற்றம்! முதல்வர் விஜய்யுடன் பேராசிரியர் கலையரசன் சந்திப்பு!தமிழ்நாட்டுக்கு நவ. 2 முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை!அன்பில் மகேஸை சந்திக்க மீண்டும் புழல் சிறை வந்தார் உதயநிதி!பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!அன்பில் மகேஸ் ஜாமீன் மனு நவ.2-க்கு ஒத்திவைப்பு!முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது! ரூ. 400 கோடி லஞ்சம்! 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரண்!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

பத்தா முதல் சிக்மா வரை! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (அக். 29 - நவ. 5)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

This week Ott

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள். - சித்திரிப்பு / விஜய்

Updated On :

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைப் பார்ப்போம்.

1பத்தா

Listicle image

இயக்குநர் பாலாஜி தரணிதரன் - நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியின் வெளியான திரைப்படம் ’பத்தா’.

இதில், நடிகை லிஜோ மோல் ஜோஸ், இன்ஸ்டா பிரபலம் பாலமுருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, குழந்தை நட்சத்திரமான சாய் பிருத்விராஜ் தனது அழுத்தமான நடிப்பை வழங்கியிருந்தார். இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணக் கிடைக்கிறது.

2 சிக்மா

Listicle image

இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா திரைப்படம் நாளை (அக். 30) நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

தமன் இசையில் ஆக்‌ஷன் படமாக உருவான சிக்மா படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், யோக் ஜபே, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3இம்மோர்டல்

Listicle image

ஜிவி பிரகாஷ் குமாரின் இம்மோர்டல் திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இம்மோர்டல் திரைப்படத்தை இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியிருந்தார். கதாநாயகனாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார், மகி எனும் கதாபாத்திரத்திலும், கயாது லோகர் சிந்து எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

வாலிப மயக்கத்தில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கிக் கொண்ட கதாநாயகன் அதிலிருந்து மீண்டு வந்தாரா? இல்லையா? என்பதே இம்மோர்டல் திரைப்படத்தின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

4டார்க் ஹெவன்

Listicle image

ராஜா ராணி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து பிரபலமான நடிகர் சித்துவின் தி டார்க் ஹெவன் திரைப்படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் நாளை வெளியாகிறது.

தி டார்க் ஹெவன் படத்தின் நாயகனாக நடிகர் சித்து, காவல் துறை அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் ரித்விகா, தர்ஷிகா, வேல. ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

7 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நாளில் அந்த ஊரில் மர்மமான முறையில் கொலைகள் நடக்கின்றன. அது ஏன்? அதைச் சுற்றி காவல் துறை மேற்கொள்ளும் விசாரணையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

5லவ் ஆல்​வேஸ்

Listicle image

கொரி​ய​ இணையத் தொடரான, ஹியர் வி கோ அகைன் என்ற ​தொடரைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள தொடர் லவ் ஆல்​வேஸ். இதில் கெளரி கிஷன் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தத் தொடரை 'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். இந்த இணையத் தொடர் நாளை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

6அக்கா

Listicle image

யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’, பெண்களை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதை.

நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த இணையத் தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி.

அக்கா தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் நாளை வெளியாகிறது.

7டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள் (Don't Trouble the Trouble)

Listicle image

ஷஷாங்க் ஏலேட்டி இயக்கத்தில் கற்பனை மற்றும் நகைச்சுவை கலந்த கதையம்சம் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்.

இந்தப் படத்தில் ஃபஹத் ஃபாசில், குழந்தை நட்சத்திரம் சாரா பலேகர், சௌரப் சச்தேவா மற்றும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நாளை நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

8டோரதி

Listicle image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

9தி பாரடைஸ்

Listicle image

நானியின் தி பாரடைஸ் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

10தூமகேது

Listicle image

ஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவான தூமகேது படத்தை சுதி மாடிசன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சஜின் கோபு நாயகனாவும் நிகிலா விமல் நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

Summary

Let’s take a look at which films and web series are set to be released on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.