சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

10 நாள்களுக்கு முன்பு... தேவா இறப்புக்கு குஷ்பு உருக்கம்!

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு இசையமைப்பாளர் தேவா இறப்பு குறித்து கூறியிருப்பதாவது...

Music composer Deva, Khushbu

இசையமைப்பாளர் தேவா, குஷ்பு - ENS

Updated On :

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு, “என்னால் நம்பவே முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75 வயது) இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.

தேனிசைத் தென்றல் என தமிழ்த் திரையின் ரசிகர்களால் தேவா அன்போடு அழைக்கப்பட்டார். சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே, அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இசையமைத்துக் கொண்டிருந்தார்.

அண்ணாமலை, விரலுக்கேத்த வீக்கம், மின்சார கண்ணா உள்பட பல படங்களில் குஷ்புவிற்கு தேவா இசையமைத்துள்ளார். இந்த நிலையில், அவரது இறப்பு குறித்து குஷ்பு தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

முழுவதுமாக நிலைகுலைந்துவிட்டேன். நம்பவேமுடியவில்லை. 10 நாள்களுக்கு முன்பாக ஆரோக்கியமாக சிரித்துக்கொண்டும் என்னை வாழ்த்தியவர் தற்போது உயிருடன் இல்லை.

தேனிசைத் தென்றல் என அழைக்கப்பட்டவர். தேன் போன்ற இனிமையான மனிதர் காற்றை போல இலகுவான மனிதர். இசை உலகிற்கும் சினிமாவுக்கும் அவர் அளித்த பங்களிப்பு அளப்பரியது. விரைவிலேயே சென்று விட்டார். ஏன்? உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம் தேவா சார். ஆன்மா சாந்தி அடையட்டும் என்றார்.

Summary

Absolutely devastated. Unbelievable says Khushbu Sundar about Music director Deva death

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.