கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

அரிசி மூட்டை சைஸ்ல... கார்த்தியைப் பாராட்டிய சூர்யா!

நடிகர் கார்த்தி குறித்து பேசிய நடிகர் சூர்யா....

நடிகர்கள் சூர்யா, கார்த்தி

Updated On :

நடிகர் சூர்யா அவரது சகோதரரான நடிகர் கார்த்தியைப் பாராட்டியுள்ளார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் - 2 திரைப்படம் வருகிற செப். 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வில்லனாக எஸ்ஜே சூர்யா, முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் கலந்த உளவுக்கதையாக இப்படம் உருவாகியுள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சர்தார் முதல் பாகம் நல்ல வெற்றியைப் பெற்றதால், இரண்டாம் பாகம் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, “எனக்கும் கார்த்திக்கும் இடையே போட்டியோ பொறாமையோ இருந்ததில்லை. அவன் வழி தனி வழி. என்னைச் சந்திக்கும் நிறைய பேர், ‘சார், நான் உங்க தம்பி கார்த்தியோட பெரிய ரசிகன். அவர்கிட்ட சொல்லிடுங்க’ என்பார்கள். என்னைக் குறித்து கூட அதிகம் கேட்க மாட்டார்கள். என்னைவிட கார்த்தி சினிமாவை ஆழமாக யோசிக்கக்கூடிய ஆள்.

இந்த அர்பணிப்பைப் பார்த்து வாயைப் பிளந்தது பருத்திவீரனில்தான். என் பக்கத்துலதானே இருந்த? என அப்போது வியந்தேன். கார்த்தி அமெரிக்காவிலிருந்து வந்த காலங்களில் அரிசி மூட்டை அளவில் சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி வந்து சோபாவில் தன் அருகே வைத்து உண்பார். அப்படியிருந்த ஆள், பருத்திவீரனுக்காகத் தன்னை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு, உருண்டு பிறண்டு... பாடி.. ஆடி.. சண்டை போட்டு எனக் கடுமையான உழைப்பைக் கொட்டி அந்த வாய்ப்பை விடாமல் பார்த்துக்கொண்டார். ஒரு நடிகனாக எவ்வளவு உண்மையாக இருக்க முடியுமோ அதைச் செய்யக்கூடியவர் கார்த்தி.” எனப் பாராட்டியுள்ளார்.

Actor Suriya has praised his brother, actor Karthi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.