மக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!3வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை: சென்செக்ஸ் 166 புள்ளிகள் உயர்வு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!முதல்வர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம்! டி.கே. சிவகுமார் வேண்டுகோள்!
/

ஷோ ஸ்டீலர் நான்தான்..! கார்த்தி - எஸ்.ஜே. சூர்யாவின் சர்தார் 2 டீசர்!

நடிகர்கள் கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள சர்தார் 2 படத்தின் டீசர் வெளியானது...

News image

சர்தார் 2 படத்தில் நடிகர் கார்த்தி... - youtube

Updated On :31 ஜூலை 2026, 7:47 pm IST

நடிகர்கள் கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்துள்ள “சர்தார் 2” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான “சர்தார்” படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அறிவியல் சார்ந்த புதுமைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமாக அறியப்படும் இயக்குநர் பிஎஸ் மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தியின் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம் “சர்தார் 2”.

இந்தப் படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார். நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜீஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நடிகர் கார்த்தி நடித்துள்ள “சர்தார் 2” படத்திற்காக அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் டீசர் விடியோ இன்று (ஜூலை 31) மாலை வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்தியின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படமான சர்தார் 2 வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The teaser for the movie "Sardar 2," starring Karthi and S.J. Surya, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.