FOLLOW US

ON GOOGLE DISCOVER

/

ரஜிஷா விஜயன் பிறந்த நாள்: சர்தார் 2 படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து!

நடிகை ரஜிஷா விஜயன் பிறந்த நாள் போஸ்டர் குறித்து...

News image

ரஜிஷா விஜயன் பிறந்த நாள் போஸ்டர். - படம்: எக்ஸ் / பிரின்ஸ் பிக்சர்ஸ்.

Updated On :15 ஜூலை 2026, 7:57 pm IST

நடிகை ரஜிஷா விஜயன் பிறந்த நாளுக்கு சர்தார் 2 படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. அனுராக் கரிக்கின் வெள்ளம் படத்தில் 2016ல் ரஜிஷா அறிமுகமானார்.

தமிழ், மலையாள சினிமாவில் பிரபலமாக இருக்கும் ரஜிஷா விஜயன் தமிழில் கர்ணன், ஜெய்பீம், சர்தார், பைசன் ஆகியவை வெற்றிப்படங்களாக அமைந்தன.

கடைசியாக இவர் நடித்த மஸ்திஷ்கா மரணம் என்கிற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் முதல் பாகம் 2022ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

சர்தார் 2 படத்தில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் ரஜியா விஜயன் பிறந்த நாளில் போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

அந்தப் பதிவில், “ரஜிஷா விஜயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியுடன் பல வெற்றிப் படங்களை அமைய வாழ்த்துகள்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படம் செப்.10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Summary

Many more happy returns rajisha vijayan, sardar 2 film poster

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.