நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் தான் நடித்துள்ள இம்மோர்டல் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி அறிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் ஜன நாயகன் வெளியீட்டைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாகவும் நடிகை கயாடு லோஹர் நாயகியாகவும் நடித்துள்ள இம்மோர்டல் திரைப்படம் ஹாரர் ரொமான்ஸ் பாணியில் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் த்ரில்லர் பாணியிலான கதையாக இதன் காட்சிகள் இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் ஜூலை 23ஆம் தேதி வெளியாகவிருந்தது. நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் வரும் ஜூலை 23ஆம் தேதி வெளியாகுமென இன்று (ஜூலை 15) அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் வெளியாகவில்லை. பின்னர், தேர்தல் வந்ததால், அது முடிவடைந்த பிறகு வெளியாகவிருக்கிறது.
ஜன நாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்து கூறியுள்ளதாவது:
தளபதி வந்தால் தள்ளிப்போய்தானே ஆகனும். அதுவும் கடைசியாக ஒருமுறை. ஜன நாயகன் படத்துக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். இம்மோர்டல் படம் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி வெளியாகுமென ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.
Thalapathy vandha thalli poyi dhaaney aaganum â¤ï¸â¤ï¸ adhuvum one
— G.V.Prakash Kumar (@gvprakash) July 15, 2026
Last time â¤ï¸ â¦. Best of luck team JN â¦#immortal will release in theatres on September 4th with ur support and love ⦠@AKfilmfactory @DirMari_Chinna @thinkmusicindia pic.twitter.com/E8UC01vNwX
Summary
Immortal film is Postponing because Thalapathy is arriving... GV Prakash announces new release date!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









