
மணிரத்னம் - விஜய் சேதுபதி திரைப்படத்தின் பெயர் இதுவா?
விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடித்துவரும் திரைப்படத்தின் பெயர்...

இயக்குநர் மணிரத்னம் இயக்கிவரும் புதிய திரைப்படத்தின் பெயர் குறித்து ஊகம் எழுந்துள்ளது.
இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். காதல் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு சில நாள்களுக்கு முன் கொல்கத்தாவில் தொடங்கியது.
இந்த நிலையில், அங்கு ஹவுரா பாலத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், சாய் பல்லவியும் பாடல் காட்சிக்கு நடித்து வருவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றது.
தாடி, மீசை இல்லாத விஜய் சேதுபதியுடன் சாய் பல்லவி நடந்து வரும் அக்காட்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது, இப்படத்தின் பெயர் குறித்த கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. இதில், குறிப்பிடப்பட்ட தமிழ் எழுத்துகளைப் பார்த்தால், இப்படத்திற்கு ‘இஞ்சி வெல்லம்’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிகாரப்பூர்வமாக செப். 7 ஆம் தேதி விடியோ அல்லது போஸ்டர் வெளியிட்டு அறிவிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Speculation has arisen regarding the title of the new film being directed by Mani Ratnam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






