கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

அன்பில் அவன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

அன்பில் அவன் படத்தின் ‘கல்லா நிக்குறியே’ பாடல் இன்று வெளியானது.

அசோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன்

Published On :

அன்பில் அவன் படத்தின் ‘கல்லா நிக்குறியே’ பாடல் இன்று வெளியானது.

அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.

ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

நீண்ட நாள்களாக அசோக் செல்வன் நடிப்பில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது ’அன்பில் அவன்’ படத்தின் வெளியீடு அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான ஆசை வரமே முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்தப் பாடலான ‘கல்லா நிக்குறியே’ இன்று வெளியாகியுள்ளது.

கார்த்திக் நேத்தா எழுதிய இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் செப். 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The song 'Kalla Nikkuriye' from the movie Anbil Avan was released today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.