
அசோக் செல்வனின் அன்பில் அவன் வெளியீட்டுத் தேதி!
அன்பில் அவன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு...

அன்பில் அவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

காதல் திரைப்படமாக உருவான இப்படம் செப். 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக அசோக் செல்வன் நடிப்பில் திரைப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அன்பில் அவன் வெளியாகும் தகவல் அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
The release date of the movie Anbil Avan has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






