5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு! செப். 28-ல் இறுதி விசாரணை!சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகிவிட்டது! மு.க. ஸ்டாலின்தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பில்லை! மார்க்சிய கம்யூ. அறிவிப்பு! திமுகவினரால் எனக்கு ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது! பேரவைத் தலைவர்புதிய தலைமைச் செயலகம்: முதல்வா் விஜய் இன்று ஆலோசனை இஸ்ரோ தனியாா்மயம் ஆக்கப்படாது: வி. நாராயணன் சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவு இடைவெளி: கிராமப் பகுதிகளுக்கும் 25 நாள்களாகக் குறைப்பு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு நேபாளத்தில் தேசிய துக்க தினம் அனுசரிப்பு: உயிரிழப்பு 1,356-ஆக உயா்வு

மஞ்சணத்தி 4 பெண்களை மையப்படுத்திய கதை: மாரி செல்வராஜ்

மஞ்சணத்தி குறித்து மாரி செல்வராஜ் பேச்சு....

மஞ்சணத்தி படக்குழு.

Published On :8 செப்டம்பர் 2026, 11:03 am IST

இயக்குநர் மாரி செல்வராஜ் மஞ்சணத்தி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இறுதியாக இயக்கிய பைசன் திரைப்படம் வணிக மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமானது. தொடர் வெற்றிகளைக் கொடுப்பதால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் வளர்ந்துள்ளார்.

தற்போது, மாரி செல்வராஜ் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் மூலம் மஞ்சணத்தி என்கிற திரைப்படத்தை இயக்குகிறார்.

இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க, நடிகர்கள் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை இளையராஜா தேனியில் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “மஞ்சணத்தி திரைப்படம் 4 பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது. இந்த மாதிரி எதார்த்தமான கதைக்கு பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹரை தேர்வு செய்ததற்கு காரணம் உள்ளது. அது ஏற்றுக்கொள்ளும் வகையிலும் இருக்கும். இப்படம் திருநெல்வேலியிலிருந்து காஷ்மீர் வரை நிகழும் பெரிய திரைப்படமாக உருவாகிறது. 90 நாள்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளோம். என் திரைப்பயணம் நடிகர் கதிருடன் ஆரம்பமானது. இடையே இடைவெளி ஆனாது. இப்படம் அதனை நிரப்பும்படி இருக்கும். மஞ்சணத்தியை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Director Mari Selvaraj has spoken about the film Manjammal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.