உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

அடுத்தடுத்து தமிழ்ப்படங்களில் ஒப்பந்தமாகும் அனிஷ்மா அனில்குமார்!

அனிஷ்மா அனில்குமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து...

இயக்குநர் மாரி செல்வராஜுடன் நடிகை அனிஷ்மா அனில்குமார்

Published On :3 செப்டம்பர் 2026, 3:13 pm IST

நடிகை அனிஷ்மா அனில்குமார் இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிப்பில் நடித்து வருகிறார்.

மலையாள நடிகையான அனிஷ்மா அனில்குமார் தமிழில் சிறை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அட்டகாசமான நடிப்பை வழங்கி அப்படத்தின் வெற்றிக்கும் முக்கிய பங்களிப்பைச் செய்தார்.

தொடர்ந்து, நடிகர் கென் உடன் இணைந்து யூத் திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற முட்ட கலக்கி பாடல் மற்றும் தனக்கான காட்சிகளில் அனிஷ்மா சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தார். அதுவும் ரூ. 80 கோடி வரை வசூலித்து வெற்றியைப் பதிவு செய்தது.

நடிகை அனிஷ்மா அனில்குமார்

நடிகை அனிஷ்மா அனில்குமார்

அண்மையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் திரைக்கு வந்த மொத ராத்திரி திரைப்படத்தில் நடிகர் ரிஷிகாந்த்துக்கு ஜோடியாக நடித்து பலரையும் கவர்ந்திருந்தார். இந்த நிலையில், அடுத்தடுத்து 3 வெற்றிப்படங்களில் நடித்த அனிஷ்மா தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிக்கும் மாகாளி என்கிற திரைப்படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழில் அறிமுகமாகி ஒரே ஆண்டிற்குள் முக்கியமான நடிகையாக வளர்ந்து வரும் அனிஷ்மா சக நடிகைகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

Actress Anishma Anilkumar is acting in a film produced by director Mari Selvaraj.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.