
எழுத்து, இயக்கம், தயாரிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங்... அஸ்ஸாம் பெண் இயக்குநரின் வில்லேஜ் ராக்ஸ்டார் 2!
அஸ்ஸாம் பெண் இயக்குநர் ரிமா தாஸ் இயக்கிய வில்லேஜ் ராக்ஸ்டார் 2 வெளியீட்டுத் தேதி குறித்து...

வில்லேஜ் ராக்ஸ்டார் 2 போஸ்டர் - படம்: இன்ஸ்டா / ரிமா தாஸ்
தேசிய விருது வென்ற அஸ்ஸாமிய பெண் இயக்குநர் ரிமா தாஸ் (44 வயது) இயக்கிய வில்லேஜ் ராக்ஸ்டார் 2 வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமைச் சேர்ந்த இயக்குநர் ரிமா தாஸ் (44 வயது) முதன்முதலாக வில்லேஜ் ராக்ஸ்டார் என்ற படத்தின் மூலமாக தேசிய விருது பெற்று பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது.
ஃப்ளையிங் ரிவர் ஃபிலிம்ஸ், அகங்கா ஃபிலிம் ஏசியா சார்பாக ரிமா தாஸே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். கதை எழுதிய இயக்கிய இவரே இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவும் எடிட் செய்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளைப் பெற்ற இந்தப் படம் வரும் செப்.25ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை, தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என முக்கியமான நகரங்களில் இந்தப் படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
’நாட் எ ஹீரோ’ என்ற படத்தினை அவரே தயாரித்து இயக்கியுள்ளார். பெர்லின் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு பிப்ரவரியில், ’கிரிஸ்டல் பியர் ஸ்பெஷல் மென்ஷன் விருது’ கிடைத்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தின் கிராமம் ஒன்றைக் கதைக் களமாகக் கொண்ட அப்படம், வறுமையைத் தவிர வேறு எதையும் அறியாத 10 வயது சிறுமியின் கனவுகளை பேசுகிறது.
கிதார் இசைக் கருவியை வாங்குவதையும், கிராமிய இசைக் குழு ஒன்றை அமைப்பதையுமே இலட்சியமாகக் கொண்ட அந்த பதின் பருவ சிறுமியின் வாழ்க்கையில் நிறைந்திருக்கும் வலிகளும், வண்ணங்களும்தான் "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' படத்தின் கருப்பொருளாக அமைந்திருந்தது.
முதல் பாகத்தில் நடித்தவர்களே இதிலும் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை கோயங்கா என்டர்பிரைசஸ் வெளியிடுகிறது. இது குறித்து ரிமா தாஸ், “சிலர் திரைப்பட விழாக்களில் பார்த்திருப்பார்கள். அதிகான ரசிகர்களை இந்தப் படம் சென்றடைவது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
Summary
Rima Das' 'Village Rockstars 2' to release nationwide on September 25
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






