மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

பிக் பாஸ் 10 புதிய விதி பிடிக்கவில்லை! வெளியேறிய பிறகு சவின்யா சிறப்புப் பேட்டி!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக வெளியேறிய சவின்யா, தினமணி இணையதளப் பக்கத்திற்கு அளித்துள்ள பேட்டி குறித்து...

bigg boss 10 savinya

சவின்யா - படம் / நன்றி - ஹாட்ஸ்டார்

Published On :
Q

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்ற சீசன்களில் இருந்து பிக் பாஸ் சீசன் 10 எந்த வகையில் வேறுபட்டுள்ளது. ஒரு போட்டியாளராக உங்கள் கருத்து?

A

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் வீட்டின் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் வாக்களித்து ஒருவரை வெளியேற்றுவது இதுவே முதல்முறை. இதுமட்டுமின்றி அறிமுக நிகழ்ச்சியில் மூன்று பேரை நிற்கவைத்து அதில் ஒருவரை காயப்படுத்திவிட்டு இருவரை தேர்வு செய்வது இதுவே முதல்முறை. மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தாலும், எனக்கு அது பிடிக்கவில்லை.

Q

மிகக் குறுகிய நாள்களில் (4 நாள்கள்) வெளியேற்றப்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

A

பிக் பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் எனக்கு எதிராக வாக்களித்ததுதான் காரணம். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், வினோத்பாபுதான் நான் வெளியேறக் காரணம். அவர்தான் ஒரே இரவில் தனது முடிவை மாற்றிக்கொண்டார். அதனால்தான் இப்போது நான் வெளியே இருக்கிறேன்.

Q

சக போட்டியாளர்களிடம் உங்களை நிரூபிப்பதற்கான கால அளவு போதுமானதாக இல்லையா?

A

சக போட்டியாளர்களுக்கு என் திறமையை என் தகுதியை வெளிப்படுத்துவதற்கு உள்ளே இருந்த நேரம் எனக்கு போதுமானதாக இல்லை என்பது உண்மைதான். ஆனால், ஒன்றுமே செய்யாதவர்கள் வீட்டிற்குள் உள்ளனர். நான் அவர்களை விட நன்றாகவே செயல்பட்டேன். ஆனால் வெளியே இருக்கிறேன்.

Q

உள்ளே இருக்கும் போட்டியாளர்களே வாக்களித்ததால் வெளியேறிவிட்டீர்கள். மக்கள் வாக்களித்திருந்தால்?

A

மக்கள் வாக்களித்திருந்தால் நான் நிச்சயம் பிக் பாஸ் வீட்டில் இருந்திருப்பேன். ஏனென்றால், அறிமுக நிகழ்ச்சியில் மக்கள் வாக்களித்து என்னை உள்ளே அனுப்பியுள்ளனர். அவர்கள் நிச்சயம் எனக்கு வாக்களித்து உள்ளே இருக்க வைத்திருப்பார்கள்.

Q

பிக் பாஸ் வீட்டில் முதல் இரு நாள்களிலேயே சோர்ந்துவிட்டீர்கள்? காரணம் என்ன?

A

பிக் பாஸ் வீட்டில் இவர்கள் அனைவரும் (போட்டியாளர்கள்) வாக்களிக்க உள்ளார்கள் என்பது எனக்கு முன்பே தெரியும். அவர்கள் என்னை வெளியேற்றிவிட்டார்கள். இதுவே மக்கள் வாக்களிப்பார்கள் என்று இருந்திருந்தால் நான் சோர்வடைந்திருக்க மாட்டேன். எனக்கு சமூக வலைதளங்களில் பதிவுகளை இட பிஆர் குழு என எதுவும் இல்லை. எந்தவொரு பின்புலமும் இல்லாமல் மேடையில் நின்றிருந்தபோதே மக்கள் வாக்களித்து ஆதரவு அளித்தனர். உள்ளே இருந்திருந்தால் நிச்சயம் எனக்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கும்.

Q

போட்டியாளர்களாக இருக்கும் பலரின் சமூகவலைதளப் பக்கத்தில் அவர்களின் பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுதுகள் விடியோவாக எடிட் செய்து பதிவிடப்படுகிறது. கன்டன்ட் ஆக மாற்றுகிறார்கள். உங்களிடம் இருந்து அவ்வாறு ஒரு பதிவு கூட வரவில்லையே?

A

இதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலில் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்ததே குறைவான நாள்கள்தான். மற்றொன்று, மக்கள் தொடர்புக்கு ஆட்களை வைத்து சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிடும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லை. மக்களாக விரும்பி எனக்கு மெசேஜ் செய்திருந்தால், அதனை என் வீட்டில் இருப்பவர்கள் ஸ்டோரியாகப் பதிவிடுவார்கள். இதுதான் நடந்தது. அதனால்தான் பதிவுகள் இல்லை.

Q

பிக் பாஸ் வீட்ல லட்சுமி பிரியா தெரியல அப்டீனு நீங்க சொல்லியிருந்தீங்க? லட்சுமி பிரியாவோட உங்கள் அனுபவம் எப்படி?

A

கோமாளி டாஸ்க்கின்போது மட்டுமே லட்சுமி பிரியா என்னிடம் பேசினார். மற்ற நேரங்களில் அவர் என்னிடம் பேசவே இல்லை. அதில்தான் அவர் தெரிந்தார். மற்ற நேரங்களில் அவர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், அவர் என்னிடம் ஒரு விஷயம் கூறினார். அதாவது தனக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறினார். ரசிகர் பட்டாளத்தால் அவர் போட்டியில் உண்மையான உழைப்பை போடவில்லை.

Q

பிக் பாஸ் வீட்ல யாரோட உங்களுக்கு நல்ல ஒரு நட்புறவு (friendship bond) இருந்துச்சு?

A

அது, ஷமாவோடுதான். இதற்கு அடுத்து சாந்தினியுடன் எனக்கு நல்ல நட்புறவு ஏற்பட்டது. அவர்கள் இருவருமே உண்மையான மனிதர்கள்.

Q

தூண்டிவிட்டால் மட்டுமே சவின்யா பேசுவார்! என விஜய் சேதுபதியிடம் ராகவ் கூறியிருந்தாரே?

A

போட்டியாளர்களைப் பற்றி மதிப்பிடும்போதே அவர்களைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதைக் கூறியிருக்க வேண்டும்.

நான் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறேன் என்பதை மேடையில் இருந்து கூறியதைவிட உள்ளே இருக்கும்போதே கூறியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தேன் என்றால், அவர்களுக்கு என்னைப்பற்றி தெரிந்திருக்கும். எனக்கு இது நடந்திருக்காது.

Q

நீங்கள் வெளியேறிய பிறகு ராகவ் உங்களுக்கு ஆதரவாகப் பேசியிருந்தாரே?

A

தூண்டிவிட்டால் மட்டுமே நான் நன்றாகப் பேசுவேன் என ராகவ் நினைத்துக் கொண்டிருக்கிறார். நான் இயல்பாகவே பேசக்கூடிய நபர்தான். ஆனால், அந்த வீட்டில் பேசுவதற்கான சூழலே இருக்காது. அதனைத்தாண்டி பேசும்போது, அதனை யாரும் கேட்கவும் மாட்டார்கள். அதுதான் முக்கிய பிரச்னையே.

Q

பிக் பாஸ் என்றாலே மன அழுத்தம் கொடுக்கக்கூடிய போட்டிதான். அப்படி இருந்தும் பிக் பாஸ் வீட்டில் யார் வெளிப்படைத்தன்மையோடு உண்மையாக இருந்தார்கள்?

A

ஷமாதான். ஷமாவின் விளையாட்டைப் பார்ப்பவர்கள் யாருமே என்னிடம் குறை கூறவே இல்லை. அவர் நேர்மையான மனிதர்.

அவர் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து வந்தவர். அதனால், இப்போட்டியில் அவர் பாதி கிணறு தாண்டிவிட்டார். இப்போது பிக் பாஸ் வீட்டில் நடப்பவை அவருக்கு மிகவும் எளிதானதாகவே இருக்கும்.

Q

பிக் பாஸ் வீட்டில் யார் கடைசி வரை நீடிப்பார்கள்?

A

ஷமா கடைசிவரை வருவார். இவருக்கு அடுத்தபடியாக லட்சுமி பிரியா. ஏன் லட்சுமி பிரியாவைக் கூறுகிறேன் என்றால், அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். அதனால் அவர் வெற்றி பெற வாய்ப்புள்ளது. பிறகு, அடாவடி அன்சர், வினோத் பாபுவும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Q

முனியம்மா, ஜேசன் ஆகியோரும் காமன்மேனில் இருந்து வந்தவர்கள். அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

A

ஜேசன் கூட வெற்றியாளராக வாய்ப்புகள் உள்ளன. அவர்களுக்கு பிக் பாஸ் காமன்மேன் அனுபவம் உள்ளது.

ஆனால், முனியம்மா ஒரு 50 நாள் மட்டுமே இருப்பார். அதுவும் கண்டெட்டுக்காகத்தான் இருக்கும். அதிக நாள்கள் அவரை உள்ளே வைத்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவரை வெளியே அனுப்பிவிடுவார்கள் என சவின்யா குறிப்பிட்டார்.

Didn't like the new Bigg Boss 10 rule Savinya's exclusive interview after exiting to dinamani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.