ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் மகாராஜா!

மகாராஜா திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகத் தகவல்...

நடிகர் விஜய் சேதுபதி

Published On :

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் சேதுபதியின் 50ஆவது திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு குப்பைத்தொட்டியையும் அதன் பின் இருக்கும் எமோஷனலாக கதையையும் மையமாக வைத்து படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது.

சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து படத்தை தயாரிக்க, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருந்தார். படத்தில், விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்த இப்படம், ஓடிடியிலும் வெளியாகி பெரும்பாலோனோரின் விருப்பத் திரைப்படமாக அமைந்திருந்தது. மேலும் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட மகாராஜா திரைப்படம் அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Story image

இந்த நிலையில், இப்படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். மேலும், தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய ஹாலிவுட் ஏஜென்ஸி மகாராஜாவின் ரீமேக் உரிமைக்கான விவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதில் பிரபல நடிகர் மேத்யூ மெக்கனாகேவை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மகாராஜா தயாரிப்பாளர் சுதன் கூறியுள்ளார். மேலும், இப்படத்தின் ஹாலிவுட் ரீமேக் பணிகள் அடுத்தாண்டு தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் திரைப்படமொன்று உலகளவில் பிரபலமடைந்ததுடன் முதல்முறை ஹாலிவுட் ரீமேக்கையும் காண உள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Reports indicate that the film Maharaja, starring actor Vijay Sethupathi, is set to be remade in Hollywood.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.