
ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்!
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள “சிக்மா” படத்தின் டிரைலர்...
சிக்மா படத்தின் போஸ்டர்...
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள “சிக்மா” திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள “சிக்மா” படத்தின் மூலம் தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
தமன் இசையில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்புதாசன், யோக் ஜபே, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வந்த “சிக்மா” திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று (செப். 18) வெளியிட்டுள்ளது.
இத்துடன், வரும் அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The trailer for the film "Sigma," directed by Jason Sanjay, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






