சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா! கோவையில் கவனம் ஈர்த்த விஜய் - அஜித் போஸ்டர்!
கோவையில் ஒட்டப்பட்டுள்ள முதல்வர் விஜய், நடிகர் அஜித் போஸ்டர்கள் குறித்து.....

கோவையில் ஒட்டப்பட்டுள்ள முதல்வர் விஜய், நடிகர் அஜித் போஸ்டர்கள்.
கோவையில் ஒட்டப்பட்டுள்ள முதல்வர் விஜய், நடிகர் அஜித் ஆகிய இருவரின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் லண்டன் சென்றிருந்த தமிழக முதல்வரும் நடிகருமான விஜய், அங்கு நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தய திடலுக்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நட்சத்திரங்களும் பரஸ்பரம் ஆரத்தழுவி நெகிழ்ச்சியுடன் உரையாடிய நிகழ்வு, இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களிலும் இச்சந்திப்பு குறித்துப் பலரும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். இந்தச் சந்திப்பைக் கொண்டாடும் விதமாக, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகிய இருவரும் இணைந்து இருக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
"சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்டா!" என்கிற வசனம் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர்களை அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர் உள்ளிட்ட கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், அவ்வழியாகச் செல்லும் மக்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
Summary
The posters featuring Chief Minister Vijay and actor Ajith pasted in Coimbatore have caught the attention of many.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








