
ஜான்வி கபூரைத் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்த கயாடு லோஹர்!
பாரடைஸ் திரைப்படத்தில் கயாடு லோஹர் கதாபாத்திரம் குறித்து...

நடிகர் நானியின் பாரடைஸ் திரைப்படத்தில் கயாடு லோஹர் கவர்ச்சியாக நடிக்க வைக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவான தி பாரடைஸ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த படம் என்பதாலும் இசையமைப்பாளர் அனிருத்தி ஆயா ஷெர் பாடலும் படத்திற்கு எதிர்பார்ப்புகளைக் கூட்ட, நானி ரசிகர்கள் ஆவலாக முன்பதிவு செய்துள்ளனர்.
ஆனால், இப்படத்தின் சிறப்பு கட்டணக் காட்சி நேற்று (செப். 23) மாலை இந்தியாவின் பல பகுதிகளிலும் திரையிடப்பட்டது. அதில் காட்சியைக் கண்ட ரசிகர்கள் படம் சுமாரா இருப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரம், இப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை கயாடு லோஹரை மிகக் கவர்ச்சியாக காட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தெலுங்கு கமர்சியல் திரைப்படங்களில் ஏன் இன்னமும் நாயகிகளை வேண்டுமென்றே கவர்ச்சியாகக் காட்டி வருகின்றனர் என்கிற பார்வையும் விவாதிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான பெத்தி படத்திலும் நடிகை ஜான்வி கபூரை அரைகுறை ஆடையுடன் வரும் நாயகியாக நடிக்க வைத்திருந்தனர்.
தற்போது, நடிகர் நானி திரைப்படத்தில் கயாடு லோஹரும் அந்த மாதிரிதான் பயன்படுத்தப்பட்டுள்ளார் எனக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
Criticism has arisen regarding Gayadu Lohar's glamorous portrayal in actor Nani's film Paradise.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







