
நாகர்ஜுனாவின் 100-வது படத்தில் வில்லனாக அசோக் செல்வன்!
நாகர்ஜுனாவின் 100-வது படத்தில் அசோக் செல்வன் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்...

நாகர்ஜுனா, அசோக் செல்வன் - கோப்புப்படம்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகனான நாகர்ஜுனாவின் 100வது படத்தில் வில்லனாக அசோக் செல்வன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசோக் செல்வன் நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படத்தை இயக்கிய ரா. கார்த்தி, நாகர்ஜுனாவின் 100-வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு கிங் 100 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் தபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சுஷ்மிதா பட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், கிங் 100 படத்தில் நாகர்ஜுனாவுக்கு வில்லனாக அசோக் செல்வன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிங் 100 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 24 அன்று கிறிஸ்துமஸ் வெளியீடாக மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நாகர்ஜுனாவின் 100வது படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ், தெலுங்கு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
Summary
Ashok Selvan to play the villain in Nagarjuna's 100th film!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







