ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவுகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

ஹிப்ஹாப் ஆதியைப் பாராட்டிய இசையமைப்பாளர் தேவா!

இசையமைப்பாளர் தேவாவிடம் பாராட்டுகளைப் பெற்ற ஹிப்ஹாப் ஆதி..

Published On :

மீசைய முறுக்கு - 2 திரைப்படத்திற்காக ஹிப்ஹாப் ஆதியை இசையமைப்பாளர் தேவா பாராட்டியுள்ளார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்த மீசைய முறுக்கு - 2 கடந்த வெள்ளிக்கிழமை (செப். 25) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஜென்ஸி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இப்படம் மூன்று நாள் வசூலாக ரூ. 51 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் முன்பே ஹிட் அடித்ததால் திரையரங்கில் கண்ட ரசிகர்கள் குத்தாட்டம் போட்டனர். முக்கியமாக, ஆரா 10/10 பாடல் பெரியளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் தேவா மீசைய முறுக்கு - 2 படத்தைப் பார்த்துவிட்டு ஆதியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஆதி, “இது போதும் எனக்கு... இது போதுமே... கரையிலிருந்து கானாவை திரைக்கு எடுத்து சென்ற ஹீரோ - மீசைய முறுக்கு - 2 படத்தை பார்த்து பாராட்டியதுதான் இந்தப் படத்திற்கு கிடைக்ககூடிய மிகப்பெரும் அங்கீகாரம் !” எனக் குறிப்பிட்டு தன் மகிழ்ச்சியைப் வெளிப்படுத்தியுள்ளார்.

Music composer Deva has praised Hiphop Adhi for the movie Meesaya Murukku 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER