
கீர்த்தி சுரேஷ் - ராதிகா ஆப்தேவின் அக்கா இணையத் தொடரின் வெளியீடு எப்போது?
அக்கா இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி குறித்து...

அக்கா இணையத் தொடர் - படம்: எக்ஸ்
அக்கா இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் புதிய இணையத் தொடரில் நடித்துள்ளனர். இந்தத் தொடருக்கு அக்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த இணையத் தொடரை ஒய்ஆர்எஃப் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார்.
இந்தத் தொடரில் தன்வி ஆஸ்மி மற்றும் அன்ஷுமான் புஷ்கர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அக்கா தொடர் நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்து வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 2023-ல் இந்தத் தொடர் குறித்து அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடரின், முதல் போஸ்டர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.
இந்தத் தொடர், 1980-களில் பெர்னூர் என்ற கற்பனையான ஊரில் நடக்கும் கதையாகவும், பெண் ஆதிக்க சமூகத்தை மையப்படுத்தியும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அக்கா இணையத் தொடர் வரும் அக். 30 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Information regarding the release date of the web series 'Akka' has been revealed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







