
தனுஷ் - 56 பூஜை விடியோ... திரைப்பட வெளியீடு அறிவிப்பு!
தனுஷ் - 56 பூஜை விடியோ வெளியாகியுள்ளது...

நடிகர்கள் தனுஷ், எஸ்ஜே சூர்யா, வடிவேலு.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் அவரது 56-வது திரைப்படத்தின் பூஜை விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயிலில் பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் தனுஷ், கருப்பணசாமிக்கு 18 அடி அரிவாள் காணிக்கையாக வழங்கினார். நிகழ்வில் நடிகர்கள் வடிவேலு, எஸ். ஜே. சூர்யா, பிரீத்தி முகுந்தன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், நடிகர் தனுஷைக் காண மாரநாடு கருப்பணசாமி கோயிலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
இதனைக் கண்ட நடிகர் வடிவேலு, “காரில் வரும்போதே எண்ண முடியாத அளவிற்கான கார்களை பார்த்தேன். திரைப்படத்தின் பூஜையே மாநாடு போல் இருக்கிறது. இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்கள் என நினைக்கவில்லை. மிரண்டுவிட்டேன். உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் தேவை” எனத் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த பூஜை விடியோவை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. மேலும், இதில் 2027 கோடை வெளியீடாக இப்படம் திரைக்கு வரும் என்பதையும் அறிவித்துள்ளனர்.
A video of the pooja ceremony for actor Dhanush's 56th film has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







