
இசையமைப்பாளர் இளையராஜா வெளிநாடு செல்லும்போது அவருடன் கூடச் சென்று இசைக் குழுவில் பாடி வருபவர் மது ஐயர். 'பேரன்பு' படத்தில் இவர் பாடியுள்ள 'செத்துப் போன மனசு' பாடல் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதுபோன்று 'ஒரு குப்பை கதை' படத்தில், இவர் பாடிய 'மழை பொழிந்ததும் நேரம்...' பாடலும் நல்ல ஹிட். 'தேவதேவதை' என்ற 'அமர காவியம்' படத்தின் பாடல்தான் இவரது முதல் பாடல்.
முறையாக கர்நாடக சங்கீதம் பயின்றவர். இதனால் இவருக்கு இரண்டு பெரிய பெரிய ஆசைகள். ஒன்று, மியூசிக் அகாதெமியில் கர்நாடக கச்சேரி செய்ய வேண்டும். அடுத்து, நிறைய ஆல்பங்களை வெளியிட வேண்டும் என்பது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.