மணிரத்னம் சார், பொன்னியின் செல்வனுக்கு இவங்களையும் கொஞ்சம் பரிசீலிக்கலாமே... வாசகப் பரிந்துரை!

நாவலை மிக ரசித்து வாசித்தவர்களுக்கு இயக்குனரின் தேர்வாக நேற்று வந்த அறிவிப்பு சற்றே ஏமாற்றமளிக்கலாம். ஏனென்றால் இந்தக் கதை பலரும் அறிந்த கதை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ரசனையுடனும்
மணிரத்னம் சார், பொன்னியின் செல்வனுக்கு இவங்களையும் கொஞ்சம் பரிசீலிக்கலாமே... வாசகப் பரிந்துரை!

அது ஒரு நாவலாக இருக்கட்டும் அல்லது சிறுகதையாக இருக்கட்டும் வாசிக்கும் போதே அதன் கதாபாத்திரங்களோடு நாம் மனதளவில் நெருங்கி விடுவோம், சில கதாபாத்திரங்கள் சட்டென்று தோழமை ஆகி மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடும் ...

சில கதாபாத்திரங்கள் வெறுப்பைத் தரும், வெகு சில பிரமிப்பைத் தரும்... இன்னும் சில கதாபாத்திரங்களோ பிரமிப்பையும் தந்து அவர்களைப் பின்பற்றலாம் என்ற உணர்வையும் தரும். சில கதாபாத்திரங்கள் பிக் பாஸ் ஜூலி போல வந்து சர்வைவல் ஆஃப் தி ஃபிட்’ எனும் தத்துவத்தை மண்டையில் குட்டிச் சொல்லி அட! இதப்பார்றா... என்றும் கூட நம்மை சபாஷ் போட வைக்கும். இன்னும் சில விதமானவை அனுதாபப்பட வைக்கும், சில கதாபாத்திரங்கள் வெடித்துச் சிரிக்க வைக்கும். சரி எதற்கித்தனை பீடிகை என்று நீங்கள் பொறுமை இழப்பதற்குள் நான் விஷயத்தைச் சொல்லி விடுவது உத்தமம்.

பொன்னியின் செல்வன் நாவல் வாசித்து அதன் ரசிக சிகாமணிகளானவர்களுக்கு இந்தக் கட்டுரையைச் சமர்பிக்கிறேன். பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கினால் இப்போதைக்கு பீல்டில் இருக்கும் எந்தெந்த நடிகர்கள் எல்லாம் ஓரளவுக்கேனும் பொருந்துவார்கள் என்ற கற்பனையில் எழுதப்பட்டது இது.

படித்து விட்டு உங்கள் அபிப்ராயத்தையும், கதாபாத்திரத் தேர்வையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

  • வந்தியத்தேவன் - விக்ரம் 
  • குந்தவை -  ரம்யா கிருஷ்ணன் 
  • நந்தினி - ஐஸ்வர்யா ராய்
  • அருண் மொழி வர்மன் -  பிரபாஸ் அல்லது ரண்வீர் சிங்
  • வானதி - கீர்த்தி சுரேஷ் 
  • சேந்தன் அமுதன் - ஜெயம் ரவி
  • பூங்குழலி -  அனுஷ்கா ஷெட்டி அல்லது சமந்தா
  • மணிமேகலை - த்ரிஷா
  • சுந்தர சோழர் - பிரபு 
  • வானவன் மாதேவி - ஜெயந்தி
  • வீர பாண்டியன் - நெப்போலியன்
  • செம்பியன் மாதேவி - லக்ஷ்மி
  • கண்டராதித்தர் - விஜயகுமார்
  • மலையமான் - அவினாஷ் (சந்திரமுகி சாமியார்)
  • பெரிய பழுவேட்டரையர் - சத்யராஜ்
  • சின்ன பழுவேட்டரையர் - சரத்குமார் அல்லது மோகன்பாபு
  • ரவிதாசன் - ராணா டகுபதி
  • மந்தாகினி (ஊமை ராணி) - ஐஸ்வர்யா ராய்
  • மதுராந்தகன் - சரத்பாபு 
  • அநிருத்த பிரம்மராயர் - மோகன்லால் 
  • ஆழ்வார்க்கடியான் - பிரம்மானந்தம் (தெலுங்கு காமெடி நடிகர்)
  • ஆதித்த கரிகாலன் - ப்ரித்விராஜ் (மலையாள நடிகர்)
  • கந்தமாறன் - ஆதி சேஷ் (பாகுபலியின் பத்ராவாக வந்து தலை வெட்டுண்ட நடிகர்)
  • பார்த்திபேந்திரன் -  கணேஷ் வெங்கட்ராம்
  • குடந்தை சோதிடர் - டெல்லி கணேஷ் (வேற யாருங்க பொருந்துவாங்க இந்த கேரக்டருக்கு?)
  • கடம்பூர் சம்புவரையர் -  ராதாரவி
  • கோடியக்கரை பூங்குழலியின் அப்பா - நாசர்
  • சேந்தன் அமுதனின் தாய் - சிம்ரன்

இதைத்தாண்டியும் இன்னும் அதிகமான கதாபாத்திரங்களை கல்கி தனது நாவலில் உலவ விட்டிருக்கிறார். நாவல் திரைப்படமாவதற்கு இவர்களே போதும்.

பொன்னியின் செல்வன் ஒரு மிகப்பெரிய கடல். அந்தக் கடலில் தான் எத்தனையெத்தனை சுவாரஸ்ய அனுபவங்கள். ஒருமுறையேனும் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல். ஒருமுறை வாசித்து முடித்து விட்டீர்களெனில் பிறகு மீண்டும் எத்தனை முறை வாசீப்பீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. அவ்வளவு அற்புதமான கற்பனைகளுடனும் சாகஸத்துடனும் விரியும் நாவல். நாவலை மிக ரசித்து வாசித்தவர்களுக்கு இயக்குனரின் தேர்வாக நேற்று வந்த அறிவிப்பு சற்றே ஏமாற்றமளிக்கலாம். ஏனென்றால் இந்தக் கதை பலரும் அறிந்த கதை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான ரசனையுடனும் அதன் கதாபாத்திரங்களைப் பற்றிய கற்பனையுடனும் நாவலை வாசித்து ரசித்திருப்பார்கள். அவர்களது ஏமாற்றத்தைப் போக்க வேண்டுமெனில் கதாபாத்திரத் தேர்வு இன்னும் நுட்பமாக இருந்திருக்க வேண்டும். மேலே உள்ள கதாபாத்திர தேர்வுப் பட்டியலைக் காட்டிலும் அற்புதமான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. பொன்னியின் செல்வன் ரசிகர்கள் தங்களது விருப்பமான நடிகர்களைப் பட்டியலிட்டு கருத்துரையிடலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com