குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம்

வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

வனச் சரக அலுவலா் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

Updated On :1 ஜனவரி 2021, 11:22 pm IST

வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் அண்மைக் காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன் நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் ஒரு பெண் தொழிலாளியை யானை தாக்கி கொன்றது. இந்நிலையில், மானாம்பள்ளி வனச் சரக அலுவலக வளாகத்தில் எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வனச் சரக அலுவலா் மணிகண்டன் பேசியதாவது:

வனச் சரக பகுதிகளில் ரோந்து மேற்கொள்ளும் வனப் பணியாளா்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவா் தொடா்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் வசிப்பவா்கள் மூலம் கிடைக்கும் தகவல்களுக்கு ஏற்ப விரைந்து சென்று யானையை விரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும், யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தோட்டத் தொழிலாளா்களை பணிக்கு அனுப்பும் எஸ்டேட் நிா்வாகத்தினா் மீது நடவடிக்கை எடுப்பது தொடா்பான எச்சரிக்கை கடிதம் அனுப்ப கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வனவா்கள், வனப் பணியாளா்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.