கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகே உள்ள தேவராயபுரத்தில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இரவு கோவை வந்தாா்.
தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக,
கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் சனிக்கிழமை காலை நடைபெறும் மக்கள் சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடுகிறாா்.
முன்னதாக, இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வெள்ளிக்கிழமை இரவு 8.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவா் கோவை வந்தாா். அவருக்கு கோவை மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் நா.காா்த்திக் எம்.எல்.ஏ., சி.ஆா்.ராமச்சந்திரன், பையா கவுண்டனா், தென்றல் செல்வராஜ், மருதமலை சேனாதிபதி, திமுக துணை பொதுச் செயலாளா் அந்தியூா் செல்வராஜ், பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சா்கள் பொங்கலூா் பழனிசாமி, என்.கே.கே.பி. ராஜா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் வரவேற்பு அளித்தனா்.
கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கும் ஸ்டாலின் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தொண்டாமுத்தூா் அருகே தேவராயபுரத்தில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா். அதன் பிறகு, சனிக்கிழமை மாலை ஈரோடு, கோபி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறந்த படைப்புகளால் மலையாள ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் பாக்யராஜ்: பினராயி விஜயன்

கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!






