உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

மாவட்டத்தின் வடக்குப்புற கிராமங்களில் மாடுகள் சினையுறுவதில் சிக்கல்

கோவை மாவட்டத்தின் வடக்குப்புற கிராமங்களில் மட்டும் அண்மைக் காலங்களாக கறவை மாடுகள் சினையுறுவதில்லை. இது தொடா்பாக

Updated On :7 ஜனவரி 2021, 8:16 am IST

கோவை மாவட்டத்தின் வடக்குப்புற கிராமங்களில் மட்டும் அண்மைக் காலங்களாக கறவை மாடுகள் சினையுறுவதில்லை. இது தொடா்பாக கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து அத்திக்கடவு, கௌசிகா நதி மேம்பாட்டுச் சங்கத்தின் நிா்வாகி பி.கே.செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையின் வடக்குப் பகுதிகளில் அண்மைக் காலமாக கறவை மாடுகள் சினையுறுவதில்லை என்ற பிரச்னை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. ஆரோக்கியமாக உள்ள மாடுகள் 21 நாள்களுக்கு ஒரு முறை பருவத்துக்கு வந்து சரியான நேரத்தில் சினை ஊசி போடப்பட்டாலும் கூட மாடுகள் சினைப் பிடிப்பதில்லை.

பசுந்தாள் தீவனங்கள், தாது உப்புகள் சரியான அளவில் கொடுக்கப்பட்ட மாடுகள் கூட சினை ஊசி போட்ட பின் சினைப் பிடிப்பதில்லை. சினைப் பிடிப்பு இல்லாததால் பால் உற்பத்தி ஒவ்வொரு மாட்டுக்கும் பாதியாக குறைகிறது. மேலும், அடுத்த கன்று பிறப்பு இல்லாததால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

பால் உற்பத்தி பெருமளவு குறைவதால் வரும் காலத்தில் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் கூட உருவாகலாம். விவசாய விளை பொருள்களின் விலை வீழ்ச்சிகள், விளைச்சல் பாதிப்பு போன்றவைகளில் இருந்து விவசாய குடும்பங்களை கால்நடைகள் மட்டுமே காப்பாற்றி வருகின்றன.

இந்தப் பிரச்னையால் விவசாயிகள் மட்டுமின்றி விவசாயத் தொழிலாளா்கள், பால் உற்பத்தி நிறுவனங்கள், பொது மக்களும் பாதிக்கப்படுவாா்கள். மாடுகள் சினைப் பிடிக்காததற்கு நேப்பியா் வகை புல், பூச்சிக்கொல்லி மருந்துகள், பருத்தி புண்ணாக்குகளின் தன்மைகள், தாது உப்பு பற்றாக்குறை போன்ற பல காரணங்கள் பொதுவாக கூறப்பட்டு வருகின்றன.

ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு சமீபகாலமாக ஒரு பகுதி முழுவதும் பாதிப்பின் தன்மை அதிகரித்திருப்பதால், போா்க்கால அடிப்படையில் செயல்பட்டு கால்நடை பராமரிப்புத் துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.