கோவை மாவட்டத்தில் டெங்கு தடுப்புப் பணிகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிக அளவில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை காலங்களில் டெங்கு தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது வடகிழக்குப் பருவமழை முடிவடைந்துவிட்டாலும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு நோய்த் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் பணிகளை மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
கரோனா நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் டெங்கு தடுப்புப் பணிகளில் சுகாதாரத் துறையினா் கவனம் செலுத்தி வருகின்றனா். வட்டாரத்துக்கு 20 போ் வீதம் ஊரகப் பகுதிகளில் 240 போ் டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மதுக்கரை, பீடம்பள்ளி, சோமனூா் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினா் டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தண்ணீா் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல், வீதிகளில் கொசு மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடா் தூவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகளை சுற்றி மழைநீா் தேங்காத வகையில் சுகாதாரமாக பராமரிக்க பொது மக்களுக்கு சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினா் 15 போ் உயிரிழப்பு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவா் தோ்வு

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! ஈரான் மீது சந்தேகம்!
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

