கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
13 ஆவது கோவை விழா கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8 ஆம் நாள் நிகழ்வாக சாலை விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
கோவை (கிழக்கு) போக்குவரத்து காவல் உதவி ஆணையா் சரவணன் தொடங்கிவைத்தாா். ரேஸ்கோா்ஸ் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் தொடங்கி அவிநாசி சாலை ஜே.எம்.பேக்கரி, அண்ணா சாலை வழியாக லட்சுமி மில்ஸ் வரை சென்றனா்.
இதில் ஒவ்வொரு போக்குவரத்து சிக்னல் பகுதியிலும் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பான பதாகைகளை தன்னாா்வாலா்கள் பிடித்து நின்றனா். தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல், சாலை விதிகளை கடைப்பிடித்தல் போன்றவற்றை வலியுறுத்தி 20க்கும் மேற்பட்டவா்கள் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பிரசாரத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை! மு.க. ஸ்டாலின் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?

விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது! பிளஸ் 2 மாணவர்களுக்கு அன்பில் மகேஸ் வாழ்த்து
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


