சென்னையின்  ‘சமையல்ராணி’ போட்டிக்கான விதிமுறைகள்!

போட்டியின் நடுவர்களாக ‘நளமகாராணி’ மல்லிகா பத்ரிநாத், பிரபல உணவியல் வல்லுனர் மீனாக்‌ஷி பெட்டுகோலா, தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் சமையல் ரசிகர்கள் நன்கறிந்த ராகேஷ் ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு
சென்னையின்  ‘சமையல்ராணி’ போட்டிக்கான விதிமுறைகள்!

சென்னையின் அன்னபூரணிகளே! தினமணி இணையதளத்தின் பிரம்மாண்ட சமையல் போட்டி 2018 ‘சென்னையின் சமையல் ராணி’யில் கலந்து கொள்ள இப்போதிருந்தே உங்களது சமையல் ஆர்வத்தை பட்டை தீட்டத் தொடங்கி இருப்பீர்கள்.

சமையல் போட்டி நடைபெறும் நாள் : செப்டம்பர் 1, சனிக்கிழமை.


நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை


இடம்: எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னை.

போட்டிக்கான விதிமுறைகள்:

சென்னையின் சமையல்ராணி போட்டியில் கலந்து கொள்ளப் பதிவு செய்துள்ளவர்கள் கீழுள்ள விதிமுறைகளைப் பின்பற்றவும்.

மெனு: சைவம் மட்டும். (இரண்டு பேருக்குப் போதுமான அளவு சமைத்தால் போதும்)

சமையல் வகைகள்:

  • (ஸ்டார்ட்டர் (துவக்க உணவு), மெயின் கோர்ஸ் (பிரதான உணவு), டெஸ்ஸர்ட் (இனிப்பு வகைகள்) மூன்று வகைகளிலும் உங்களுக்குப் பிடித்தமான ஐட்டம் ஏதாவதொன்றை போட்டியாளர்கள் சென்னையின் சமையல் ராணி போட்டிக்கான நடுவர்கள் முன்னிலையில் சமைத்துக் காட்ட வேண்டும். 
  • இதில் நீங்கள் சமைக்கப் போவது ஏதாவது ஒரு ஐட்டம் மட்டுமே, அது எந்த ஐட்டம் என்பது சஸ்பென்ஸ். அதை போட்டி நாளன்று குலுக்கல் முறையில் நீங்களே தேர்ந்தெடுத்துச் சமைக்க வேண்டும். அதனால் போட்டியாளர்கள் மூன்று விதமான ரெஸிப்பிகளுக்கும் தயாராகவே வாருங்கள்.
  • ஸ்டார்ட்டர் சமைப்பதற்கு ஃபுடிக்ஸ் (Foodix) கிறிஸ்பி மிக்ஸ் மற்றும் டொமட்டோ சூப் மசாலா பாக்கெட்டுகள் வழங்கப்படும். அவற்றைப் பயன்படுத்தி நாங்கள் அளிக்கும் காய்கறிகளைக் கொண்டு 2 வகை ஸ்டார்ட்டர் தயாரிக்க வேண்டும். கூடுதலாக உங்களது ஸ்பெஷல் ஐட்டங்களுக்குத் தேவையென நீங்கள் நினைக்கும் அனைத்து மசாலா பொருட்கள், சமைப்பதற்கு உங்களுக்குத் தேவையான சமையல் பாத்திரங்கள் அனைத்தையும் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப நீங்கள் கூடுதலாகக் கொண்டு வந்து கொள்ளலாம்.
  • மெயின் கோர்ஸ் உணவுக்கு அரிசி மற்றும் காய்கறி வகைகள் மட்டும் வழங்கப்படும். சமைப்பதற்குத் தேவையான இதர பொருட்களை உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப நீங்கள் கொண்டு வந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • டெஸ்ஸர்ட் தயாரிப்பதற்கு ஃபுடிக்ஸ் (Foodix) ஹல்வா மிக்ஸ் பாக்கெட்டுகளும், மில்க் ஷேக் பாக்கெட்டுகளும் வழங்கப்படும். இவற்றை வைத்துக் கொண்டு உங்களுக்கு விருப்பமான 2 டெஸ்ஸர்ட் வகைகளை நீங்கள் தயாரிக்க வேண்டும். டெஸ்ஸர்ட்டுகளை அலங்கரிக்கத் தேவையான பொருட்களை உங்கள் விருப்பங்களுக்கேற்ப நீங்களே கொண்டு வரலாம்.
  • சமைப்பதற்கு என இண்டக்சன் அடுப்பு வசதிகள், மிக்ஸிகள், சமைப்பதற்குத் தேவையான தண்ணீர் வசதி, உள்ளிட்டவை வழங்கப்படும்.

சமையல் போட்டிக்கான கால அளவு: 1 மணி நேரம்.

சென்னையின் சமையல்ராணி போட்டியின் நடுவர்கள்

‘நளமகாராணி’ என்று தமிழ்நாடு கொண்டாடும் மல்லிகா பத்ரிநாத், சென்னையின் பிரபல உணவியல் வல்லுனர்களில் ஒருவரான மீனாக்‌ஷி பெட்டுகோலா, சமையல் ஆர்வலர்கள் நன்கறிந்த  ‘அறுசுவை அரசி’ ரேவதி மூவரும் தான் சென்னையின் சமையல் ராணி போட்டிக்கான நடுவர்களாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கிறார்கள்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

நிகழ்ச்சியின் இறுதியில் வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

தினமணி இணையதளம் நடத்தும் இந்த பிரம்மாண்ட சமையல் போட்டிக்கான பரிசுகளும் பிரமாதமானவையாகவே இருக்கும்.

போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் வலது பக்கமுள்ள விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்து உங்களது பங்கேற்பை உறுதி செய்து கொள்ளவும்.

*சமையற்கலையில் ஆர்வமுள்ள 50 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களும் இப்போட்டியில் பங்கேற்கலாம்.

*ஆர்வமுள்ள பெண்கள் அனைவரையும் தினமணி இணையதளம் இருகரம் கூப்பி வரவேற்கிறது!

*பங்கேற்பீர்... பரிசுகளை வென்றிடுவீர்!

போட்டி குறித்த மேலதிகத் தகவல்களைப் பெற dinamani.readers@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com