தினமணி.காம் உலக சுற்றுலா தினப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!

இது கட்டுரையாயிற்றே... அதிலும் தாங்கள் சென்று வந்த சுற்றுலாக்களைப் பற்றி வாசிப்பவர்கள் அனைவரும் ஈர்க்கப்பட்டு அவர்களுக்குள்ளும் சுற்றுலா செல்லும் ஆர்வத்தைத் தூண்டும்படியாகவும்... வாசிக்கத் தூண்டும்
தினமணி.காம் உலக சுற்றுலா தினப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தினமணி.காம் தனது வாசகர்களிடையே சுற்றுலா அனுபவக் கட்டுரைகள் எழுதி அனுப்பச் சொல்லி அறிவித்திருந்தது. வாசகர்கள் அனுப்பும் கட்டுரைகளில் இருந்து சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் நனி சிறந்த 5 சுற்றுலா அனுபவங்களுக்கு பரிசு வழங்குவதாக ஏற்பாடு. ஏற்பாடெல்லாம் சரி... ஆனால், இன்றைய அவசர யுகத்தில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் என எல்லோரும் தங்களது புகைப்படங்களை பகிர்வதில் அதிக ஆர்வம் காட்டும் சமயத்தில் யார் பக்கம் பக்கமாக சுற்றுலா அனுபவக் கட்டுரைகள் எழுதி அனுப்பிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? புகைப்படம் அனுப்பச் சொன்னால் நம் மக்கள் அசராது அனுப்புவார்கள். இது கட்டுரையாயிற்றே... அதிலும் தாங்கள் சென்று வந்த சுற்றுலாக்களைப் பற்றி வாசிப்பவர்கள் அனைவரும் ஈர்க்கப்பட்டு அவர்களுக்குள்ளும் சுற்றுலா செல்லும் ஆர்வத்தைத் தூண்டும்படியாகவும்... வாசிக்கத் தூண்டும் வண்ணம் சுவாரஸ்யமாகவும் கட்டுரைகள் இருக்க வேண்டுமே என்ற யோசனை உள்ளூர ஓடிக்கொண்டு தான் இருந்தது. அந்த யோசனையை முறியடிக்கும் விதமாக நம் வாசகர்கள் மிக அருமையாக சுற்றுலாக் கட்டுரைகள் பல அனுப்பி அசத்து... அசத்தென்று அசத்தி விட்டார்கள். கடைசியில் அனைத்துக் கட்டுரைகளுமே சிறப்பானவையாக வந்து சேர்ந்ததில் எதை விடுப்பது? எதை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுப்பது என்பதில் எங்களுக்கே குழப்பமாகி விட்டது. ஒருவழியாக பல விதமான பிளஸ், மைனஸ்களை ஆராய்ந்து கடைசியில் வந்து குவிந்திருந்த சுற்றுலா அனுபவக் கட்டுரைகளில் இருந்து பரிசுக்குரிய 5 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்தோம்.

பரிசளிப்பு நிகழ்வு புகைப்படங்கள்...

முதல் பரிசு...

முருகானந்தம் சுப்ரமண்யன்

இரண்டாம் பரிசு...

ஆத்மநாதன்

மூன்றாம் பரிசு...

ரவி அருணாச்சலம்

நான்காம் பரிசு...

நெயினார் முஹமது

ஐந்தாம் பரிசு...

மீனாள் தேவராஜன் 

இந்த வெற்றியாளர் தற்போது இந்தியாவில் இல்லையென்பதால் , ஊர் திரும்பியதும்  பரிசு பெற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

பரிசு பெற்ற வாசகர்கள் அனைவருக்கும் இன்று சென்னை, தினமணி அலுவலகத்தில் வைத்து எக்ஸ்பிரஸ் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் பொதுமேலாளர் ஆர்.வெங்கட சுப்ரமண்யன் கரங்களால் பரிசுகள் வழங்கப்பட்டன. உடன் தினமணி.காம் இணையதள ஆசிரியர் ஆர்.பார்த்தசாரதி மற்றும் தினமணி.காம் ஆசிரியர் குழுவினர் பங்கேற்றனர்.

தினமணி உலக சுற்றுலா தினப்போட்டிக்கான பரிசு வழங்கும் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com