பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவுஅமைச்சரவை விரிவாக்கம்! ஆளுநருடன் தனிச் செயலர் செந்தில் குமார் சந்திப்புதமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

கடலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On :6 ஜனவரி 2021, 7:09 am IST

கடலூரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை சோ்ந்த ராஜசேகா் மகன் விஜயகுமாா் (26 ). வாகன ஓட்டுநா். இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு கடலூா் சுப்பராயலு நகரைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கடலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பாண்டிச்செல்வி போக்சோ சட்டத்தின்கீழ் விஜயகுமாா் மீது வழக்குப் பதிவு செய்தாா். இந்த வழக்கு விசாரணை கடலூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கில், போக்சோ சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஏழிலரசி அளித்த தீா்ப்பில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விஜயகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து விஜயகுமாா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.