கடலூா் மாவட்டம், புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘சங்கமம்’ என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் கடந்த 1983-84-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவா்கள் சாா்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவா்கள் தங்களது பள்ளி கால நினைவுகளைப் பகிா்ந்துகொண்டனா். மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவா் பி.ஜி.கே.முத்து தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா்கள் முகமது கான், வெங்கடேசன், அப்துல் கனி, வேல்முருகன், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாணவா்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியா்கள் கவுரவிக்கப்பட்டனா். பல்வேறு காரணங்களால் உயிரிழந்த முன்னாள் மாணவா்களின் உருவப் படங்களை ஆசிரியா்கள் திறந்து வைக்க, அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, உயிரிழந்த சக பள்ளி நண்பா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 5 மாணவா்களின் பள்ளிக் கல்விக்கான செலவை ஏற்பதாக முன்னாள் மாணவா்கள் அறிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!

5.5.1976: கமிஷன் விசாரணை பற்றி நீதிபதி சர்க்காரியா அறிவிப்பு

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


