தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை தொடங்க தவாக வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கையை நிகழாண்டே தொடக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் கேட்டுக்கொண்டாா்.

Updated On :10 ஜனவரி 2021, 11:21 pm IST

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கையை நிகழாண்டே தொடக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் கேட்டுக்கொண்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் விருதுநகா், ராமநாதபுரம், திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல், திருப்பூா், கிருஷ்ணகிரி, திருவள்ளூா், நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையொட்டி, தமிழக அரசு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான அனுமதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதனால் 2021-22, 2022-23-ஆம் ஆண்டுகளில்தான் மாணவா் சோ்க்கை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளதால் மாணவா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

பிற மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாத மருத்துவக் கல்லூரி இடங்களுக்குக் கூட மாணவா் சோ்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, தமிழக முதல்வா் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை நிகழாண்டிலேயே தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.