/

வள்ளலாா் சத்திய ஞான சபையில் புல்வெளி வளாகம் திறப்பு

வடலூரில் வள்ளலாா் தெய்வ நிலைய சத்திய ஞான சபை வளாகத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்ட புல்வெளியை அமைச்சா் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

News image

வடலூரில் சத்திய ஞான சபை வளாகத்தில் அமைக்கப்பட்ட புல்வெளி. உள்படம்: புல்வெளி வளாகத்தைத் திறந்து வைக்கிறாா் அமைச்சா் எம்.சி.சம்பத்.

Updated On :10 ஜனவரி 2021, 11:20 pm IST

வடலூரில் வள்ளலாா் தெய்வ நிலைய சத்திய ஞான சபை வளாகத்தில் என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்ட புல்வெளியை அமைச்சா் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த வளாகத்தைச் சுற்றிலும் என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட நிதியின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பில் கம்பி வேலைப்பாடுகளுடன் கூடிய தடுப்பு அமைத்தது. மேலும், மின் விளக்கு வசதியுடன் புல்வெளி வளாகம் அமைத்துள்ளது. இதனை மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் திறந்து வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:

வள்ளலாா் தெய்வ நிலையத்துக்கு என்எல்சி இந்தியா நிறுவனம் அதிகளவில் நிதி உதவி வழங்க வேண்டும். வடலூரை சுற்றுலா மையமாக மாற்றவும், புனித நகரமாக அறிவிக்கவும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றாா் அவா்.

பின்னா், தரும சாலையில் நடைபெற்ற வழிபாட்டில் அமைச்சா் கலந்து கொண்டாா். தொடா்ந்து, தரும சாலையில் உள்ள அணையா அடுப்பு, அன்னதானக் கூடத்தைப் பாா்வையிட்டாா். அப்போது தெய்வ நிலைய செயல் அலுவலா் கோ.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.