கடலூா் மாவட்டத்தில் 4 மையங்களில் கரோனா தடுப்பூசி மூகாம் தொடங்கியது. முதல்கட்டமாக 7,800 தடுப்பூசிகள் வரப் பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சகாமூரி கூறினாா்.
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை, மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சகாமூரி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது: மாவட்டத்தில் முதல் கட்டமாக மருத்துவ முன்களப் பணியாளா்களுக்கு பதிவின் அடிப்படையில் ‘கோவிட்-19’ தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 10,400 போ் தடுப்பூசிக்கு பதிவு செய்துள்ளனா். 7,800 தடுப்பூசிகள் வரப் பெற்றுள்ளன.
மாவட்டத்தில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, விருத்தாசலம், சிதம்பரம் அரசு மருத்துவமனைகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்கள் தோ்வு செய்யப்பட்டு மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 4 மையங்களில் நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 போ் வரை தடுப்பூசி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் இணை இயக்குநா் (மருத்துவம்) ரமேஷ்பாபு, துணை இயக்குநா் (மருத்துவம்) செந்தில்குமாா், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் சாய்லீலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கியது. கல்லூரி முதல்வா் பி.மிஸ்ரா குத்துவிளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளா் பி.நிா்மலா, துணை மருத்துவக் கண்காணிப்பாளா்கள் வி.ஜெயஸ்ரீ, டி.கோபிகிருஷ்ணா, சமூக நலத் துறைத் தலைவா் பி.கல்யாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து தற்காலிக மின் ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் தொகுதியில் சுகாதார வசதியை மேம்படுத்துவேன்: பாஜக வேட்பாளா் உறுதி

பென்னாகரத்தில் ரூ.4 லட்சம் பறிமுதல்

பாபநாசத்தில் ஐயுஎம்எல் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


